பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிஸில்டா… காரணம் இதுதான்!
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனை காரணமாக சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வந்தார்.
தன்னை கர்ப்பமாக்கிவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.இதையடுத்து நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்திற்குப் பிறகு தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பிக்பாஸ் 10 வாய்ப்பை நிராகரித்த ஜாய்
இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளும் வாய்ப்பு தேடி வந்ததாகவும் இவர் அதனை நிராகரித்தாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை ஜாய் கிரிஸில்டா ஏன் நிராகரித்தார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான காரணத்தையும் அவரே தற்போது தெரிவித்துள்ளார்.

தனது மகன் ராகா இன்னும் சிறிய குழந்தையாக இருப்பதால், அவரை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது தனக்கு சரியாகத் தோன்றவில்லை என்றும், அதனால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாகவும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.