பிளாஸ்டிக் நாற்காலியில் ஓட்டை இருப்பது ஏன் தெரியுமா? இவ்வளவு நாளாக தெரியாம போச்சே
பொதுவாக எமது சமூகத்திலுள்ள அனைத்து வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகள் இருப்பது குறைவு.
ஆனால் எல்லா வீடுகளிலும் குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். அதனை உட்காருவதற்கோ அல்லது ஆடைகளை போட்டு வைப்பதற்காகவோ வைத்திருப்பார்கள்.
இப்படி அனைத்து வீடுகளில் முக்கிய அக்கத்துவராக இருக்கும் நாற்காலிகளில் பின்புறத்தில் துளைகள் இருக்கும்.
இதனை இவ்வளவு நாட்களாக அலங்காரத்திற்காக என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர் இருப்பார்கள்.
மாறாக பிளாஸ்டிக் நாற்காலிகளில் துளைகள் இருப்பதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
துளைகள் வைப்பதற்கான காரணங்கள்
1. பிளாஸ்டிக் நாற்காலிகளை விஷேச வீடுகள், கூட்டங்கள், வீட்டு பாவனை, பாடசாலைகள் ஆகிய அனைத்து தேவைகளுக்காகவும் பயன்படுத்துவோம். பயன்படுத்திய பின்னர் நாற்காலிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் பழக்கம் உள்ளது. அப்போது காற்று உள்ளே போக வேண்டும் என்பதற்காகவே துளைகள் வைக்கப்பட்டுள்ளன.
2. அவ்வாறு அடுக்கிய நாற்காலிகளை அவசரத்திற்கு பொழுது துளைகளில் விரல்களை விட்டு இலகுவாக தூக்கலாம். இதனால் நாற்காலிகயை தூக்குவதில் உள்ள சிரமங்கள் மறையும்.
3. நாற்காலிகள் தயாரிக்கும் பொழுது சூடான ஒரு நிலையில் இருந்து தான் செய்யப்படுகிறது. அப்போது அந்த சூட்டை ஆற்றுவதற்கும் இப்படியான துளைகள் வைக்கப்படுகின்றன. அப்படி இல்லாவிட்டால் நாற்காலிகள் அச்சுகளில் ஒட்டிக் கொள்ளும்.
4. துளைகள் வைக்கப்படுதால் எளிதாக நாற்காலிகளை நகர்த்த முடியும். அதே சமயம் நீண்ட நாட்களுக்கு இந்த நாற்காலிகளை பயன்படுத்தலாம்.
5. பிளாஸ்டிக் நாற்காலிகளில் துளைகள் போடுவதால் பிளாஸ்டிக் கொஞ்சமாக சேமிக்கப்படுகிறது. இதனால் உற்பத்தியாளருக்கு இது ஒரு லாபமாக சேரும். ஆயிரக்கணக்கில் உற்பத்தில் செய்யும் பொழுது கோடிக்கணக்கில் லாபமாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |