கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாசனை உணர்வை இழக்கும் அதிர்ச்சி.... ஏன் தெரியுமா?
கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக காணப்பட்டு வரும் அறிகுறிகளில் வாசனை இழப்பும் ஒன்று.
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு தங்கள் வாசனை உணர்வு மற்றும் சில சமயங்களில் சுவை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வந்துள்ளனர்.
சமீபத்திய ஆய்வு ஒன்று COVID-19 நோயாளிகளுக்கு ஏற்படும் வாசனையை இழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அதிக தகவல்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

NYU கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, SARS-CoV-2 வைரஸ் நம் உடலில் உள்ள olfactory receptors-களின் செயல்பாட்டை குறைக்க முனைகிறது.
இது வாசனையுடன் தொடர்புடைய மூலக்கூறுகளை கண்டறிவதற்குப் பொறுப்பான மூக்கில் உள்ள நரம்பு செல்களின் மேற்பரப்பில் இருக்கும் புரதங்களை கூட பாதிப்பதாக இந்த புதிய ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொதுவான அறிகுறியை பற்றிய ஆழமான புரிதலை பெற, ஆராய்ச்சியாளர்கள் கோல்டன் ஹாம்ஸ்டர் மற்றும் மனித பிரேத பரிசோதனைகளிலிருந்து பெறப்பட்ட சில ஆல்ஃபாக்டரி திசுக்களில் வைரஸின் மூலக்கூறு விளைவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
வைரஸ் இருப்பதன் காரணமாக, நோயெதிர்ப்பு செல்கள், டி செல்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் ஊடுருவல் ஆகியவை ஆல்ஃபாக்டரி திசுக்களில் உள்ள நரம்பு செல்களுக்கு அருகில் காணப்பட்டதாக ஆய்வாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள்.
இந்த செல்கள் சைட்டோகைன்ஸ் எனப்படும் புரதத்தை வெளியிடுகின்றன, இது ஆல்ஃபாக்டரி நரம்பு செல்களின் மரபணு செயல்பாட்டை மாற்றுகிறது என்று ஆய்வளர்கள் கூறி உள்ளனர்.
ஆய்வின் முடிவில் SARS-CoV-2 நோய் தொற்று ஆல்ஃபாக்டரி ரெசிப்ட்டர் பில்டிங்குடன் தொடர்புடைய குரோமோசோம்களில் டிஎன்ஏ சங்கிலிகளின் திறனை குறைத்தது கண்டறியப்பட்டது.
மேலும் ஹாம்ஸ்டர்ஸ் மற்றும் மனித நரம்பியல் திசுக்கள் என இரண்டிலும், ஆல்ஃபாக்டரி ரெசிப்ட்டர் பில்டிங் பரவலாக மற்றும் நிலையாக குறைவதையும் காண முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
வாசனை இழப்பு அறிகுறியை தவிர தலைவலி, மனச்சோர்வு மற்றும் பிரெயின் ஃபாக் போன்ற வைரஸின் பிற நரம்பியல் விளைவுகளுக்கான காரணங்களை கண்டறியவும் ஆராய்ச்சியாளர்கள் குழு முயற்சித்தது.
ஆய்வாசிரியர்களில் ஒருவரான டாக்டர் பெஞ்சமின் டென்ஓவர் கூறுகையில், "சில நிபந்தனைகளின் கீழ் வாசனை இழப்பு அறிகுறி சாத்தியமான ஆபத்து அல்லது தோல்வியின் ஆரம்ப காட்டியாக இருக்கலாம் மற்றும் மூளை திசு சேதத்தின் ஆரம்ப சமிக்ஞைகளை வழங்க முடியும் என்பதை எங்கள் ஆய்வு அடிக்கோடிட்டு காட்டுகிறது" என்றார்.