மாதவிடாய் நாட்களில் ஏன் ஓய்வு அவசியம்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே மாதவிடாய் நாட்களில் பெண்களுக்குப் பூரண ஓய்வு அவசியம் என்பதன் காரணமாகவே முன்னைய காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்களை வீட்டிலிருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
அந்த 3 நாட்களில் எந்த வேலையும் செய்யாமல் அவர்களுக்கு மனமும் உடலும் முழு ஓய்வைப் பெறும்.அடுத்தடுத்த நாட்களுக்கான புத்துணர்வுடன் ஓடவும் தயார்ப்படுத்தும்.
இந்தக் காலத்தில் அப்படி ஒதுங்கி உட்காரத் தேவையில்லை என்றாலும் ஓய்வெடுப்பது மிகவும் அவசியமான தேவையாக கருதப்படுகின்றது.
ஏன் ஓய்வு அவசியம்?
மாதவிடாய் காலம் என்பது உடல்வலி தொடர்புடையது மட்டுமல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய உதிரப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவர்கள் மனரீதியாகவும் பாதிப்புகளுக்கு உள்ளாவதால் அவர்களுக்கு ஓய்வு அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
மாதவிடாய் காலத்தில் சராசரியாக 30-50மி.லி உதிரப் போக்கு ஏற்படுகிறது, உதிரப் போக்கால் ஹீமோக்ளோபின் அளவில் குறைப்பாடு, இரும்புச் சத்து குறைபாடு என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண்கள் சோர்வடைகின்றனர்.
மேலும் மாதவிடாய் காலத்தில் கழிப்பிடத்தை அதிகமாகப் பயன்படுத்த நேரிடும். நாப்கின்களை மாற்றக் கூடிய நிலை அங்கு நிலவ வேண்டும் எனவே அலுவலகத்திற்குச் செல்லும் போது அது அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.இதனால் மன அழுத்தம் அதிகமாகின்றது.
மேலும் மாதவிடாய் காலத்தில் பணிக்கு சென்றாலும் கூட, வலி ஏற்படுவதனால் அவர்களால் பணிகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது நிலையும் ஏற்படும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மாதவிலக்கு நாட்களில் சில பெண்களுக்கு ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் என சொல்லக்கூடிய பிரச்சினை வரலாம். ஹோர்மோன் மாறுதல் காரணமாகவே இது ஏற்படும். மன அழுத்தம், சோர்வு, கோபம், சோகம், அழுகை என இதன் அறிகுறிகள் எப்படியும் இருக்கலாம். இதற்கும் ஓய்வுதான் ஒரே தீர்வாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |