psychology facts: புத்திசாலி பெண்களுக்கு வாழ்க்கை துணை அமைவது கடினம்... ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே பெண்களாக பிறந்த அனைவருக்கும் தங்களின் வாழ்க்கை துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவு இருப்பது இயல்பான விடயம் தான்.
ஆனால் எல்லோருக்கும் நினைக்கும் வகையில் வாழ்க்கை துணை அமைவது மிகவும் கடினமான விடயம்.
குறிப்பாக புத்திசாலிகளாக இருக்கும் பெண்களுக்கு வாழ்க்கை துணை அமைவது மிகவும் கடினமான விடயமாக இருப்பதன் பின்னணியில் இருக்கும் உளவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உளவியல் காரணங்கள்
புத்திசாலியாக இருக்கும் பெண்களின் மேல் ஆண்கள் காதல் கொண்டாலும் பெரும்பாலான ஆண்களின் உளவியல் பிரகாரம் தன்னை விட அறிவிலும் படிப்பிலும் குறைந்த பெண்களை தான் விரும்புகின்றார்கள்.
தங்களுக்கு அடங்கியிருக்கும் ஆளுமைகளிடம் தான் ஆண்களின் மனம் நிம்மதியடைகின்றது.அதனால் புத்திசாலி பெண்களுக்கு காதல் வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கின்றது.
புத்திசாலி பெண்களுக்கு, தங்களின் மதிப்பு என்ன என்பது தெரியும். இதனால் தனது வாழ்க்கை துணையும் புத்திசாலியாகவும் உயரிய இலக்குகளை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான ஆண்கள் பெண்களிடம் அழகு மட்டும் இருந்தால் போதும் என்ற குறுகிய மனபான்மை கொண்டவர்களாக இருப்பதால் புத்திசாலி பெண்களுக்கு சரியான துணை அமைவது கடினம்.
தைரியமான, புத்திசாலியான, துணிச்சல் மிக்க பெண்களை பார்க்கும்போது சில ஆண்களுக்கு காதலுக்கு பதிலாக பயம் ஏற்படுகின்றது.
இன்னும் சில ஆண்கள் தன்னைவிட அவள் உயர்ந்தவளாக இருந்து விடுவாளோ என்ற ஆணாதிக்க குணம் கொண்டவர்களாக இருப்பதால் பெரும்பாலும் புத்திசாலி பெண்களுடன் ஆண்கள் நெருங்கி பழகுவதை தவிர்த்துவிடுகின்றார்கள்.
அறிவில் சிறந்த பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு நல்ல முதிர்ச்சி பெற்ற உறவுதான். புரிந்துணர்வுடன் வாழ்க்கையை கடக்க ஒரு துணை வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு வாழ்க்கை துணை அமைவது சற்று கடினமாகவே இருக்கும்.
காரணம் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு பொறுமை இருப்பதில்லை.இதனால் ஆண்கள் பெரும்பாலும் அறிவுடன் இருக்கும் பெண்களை அப்ரோச் செய்வதை தவிர்த்துவிடுகின்றார்கள்.
புத்திசாலி பெண்கள் தனக்கென்று ஒரு காதல் கமிட்மெண்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன், தன்னுடைய கெரியரை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் இவர்களை ஏமாற்றுவது ஆண்களுக்கு சற்று கடினமாக இருக்கின்றது. அதனால் புத்திசாலி பெண்கள் போலி காதலிலும் சிக்கிக்கொள்வதில்லை.
தவறான ஆளை செலக்ட் செய்து ஒரு டாக்ஸிக்கு ரிலேஷன்ஷிப்பில் சிக்குவதை விட சிங்கிளாகவே இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் புத்திசாலி பெண்களிடம் இருப்பதால் இவர்களுக்கு காதல் அல்லது திருமண வாழ்க்கை அமைவது மிகவும் கடினமாகவுள்ளது.
புத்திசாலி பெண்கள் எப்போதும் ஆண்கள், பெண்களை கவர வேண்டுமென்றால் என்னென்ன மாதிரியான பொய் சொல்லுவார்கள், எப்படி எல்லாம் நடிப்பார்கள் என்பதை அறிந்தவர்களாக இருப்பதால், பெரும்பாலான ஆண்கள் இவ்வகையான பெண்களிடமிருந்து விலகியே இருப்பார்கள்.
புத்திசாலி பெண்கள் தங்களுக்கு சம உரிமை, சுயமரியாதை உள்ளிட்ட ஆண்களுக்கு எளிதாக கிடைக்கும் அடிப்படை விஷயங்கள் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இவ்வாறான பெண்களை விரும்புவதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
