திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாதுன்னு தெரியுமா?
பொதுவாகவே குழந்தைகள் பிறந்தால் கண்ணம் மற்றும் நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைக்கும் வழக்கத்தை தொன்று தொட்டு மத வேறுபாடுகள் இன்றி பலரும் பின்பற்றுகின்றனர்.
இதில் என்ன இருக்கின்றது என பலரும் அந்த மாதிரி நேரங்களில் நினைத்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. இதற்கு முக்கிய விஞ்ஞான விளக்கம் இருக்கின்றது.
கருப்பு பொட்டு அல்லது கருப்பு நிற கயிறுகளை நாம் கட்டிருப்பதால் மற்றவர்களின் தீய எண்ணங்கள் எம்மை சூழாமல் காத்து கொள்ளலாம்.
கருப்பு பொட்டு வைப்பதனால் இவ்வளவு அனுகூலங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணமான பெண்கள் மாத்திரம் கருப்பு பொட்டு வைக்க கூடாது என்று பெரியோர் சொல்லி வைத்திருக்கின்றார்கள் இதற்கு என்ன காரணம் என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
திருமணமான பெண்கள் ஏன் கருப்பு பொட்டு வைக்க கூடாது?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் வைக்கும் பொட்டின் நிறத்துக்கும் கிரகங்களின் தன்மைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் கருப்பு பொட்டு சனி கிரகத்துடன் தொடர்புடையது. அதனால் கருப்பு பொட்டு வைக்கும் போது திருமண வாழ்க்கையில் சனிபகவானின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.
திருமணமான பெண்களை பொருத்த வரையில் உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் இதனால் திருமணத்தின் பின்னர் கருப்பு பொட்டு வைத்தால் அது பெண்களை நோக்கி எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது என்று நம்பப்படுகிறது.
இதனால் திருமண வாழ்க்கையில் பல்வேறு பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகின்றது.
குறிப்பாக திருமணமான பெண்கள் சிவப்பு பொட்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றார்கள். சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. மேலும், சக்தி மற்றும் திருமண மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது.
திருமணமான பெண்கள் சிவப்பு பொட்டு வைப்பதால் திருமண வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.
திருமணமான பெண்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு அல்லது வேறு எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பொட்டு வைக்கலாம் இதனால் எந்த பாதக விளைவும் ஏற்படாது.
கருப்பு நிறம் சனி மற்றும் ராகு இருவரது நிறமாக கருதப்படுகிறது.இதனால் திருமணமான பெண்கள் கருப்பு நிறத்தில் மாத்திரம் பொட்டு வைப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அப்படியும் கருப்பு பொட்டு பயன்படுத்த விரும்பினால், அதை ஒருபோதும் தனியாக பயன்படுத்தாமல் வேறு நிறத்துடன் சேர்த்து வைப்பதன் மூலம் எதிர்மறை தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |