பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா? இது தெரிஞ்சா இனிமேல் தவிர்க்க மாட்டீங்க
தொன்று தொட்டு திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
திருமணமான பெண்கள் கட்டாயம் காலில் மெட்டி அணியவேண்டும் என்பதை நமது முன்னோர்கள் கட்டாயமாக வழியுறுத்தியுள்ளார்கள். இதற்கு என்ன காரணம் என்பது குறித்து எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
இது வெறுமனே அழகுக்காகவோ அல்லது சம்பிரதாயத்துக்காகவோ மாத்திரம் அணியப்படுவது கிடையாது இதன் பின்னால் துள்ளியமான அறிவியல் காரணம் மறைந்திருக்கின்றது.இது தொடர்பில் தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மெட்டி அணிவது ஏன் அவசியம்?
பொதுவாக தமிழ் பெண்கள் திருமணமானவர்கள் என்பதை உணர்த்துவதும் ஒர் அடையாளமாக மெட்டி பார்க்கப்படுகின்றது.
பெண்களது கர்ப்பப்பையின் முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவுவதால் கர்ப்பப்பை பலமடைவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.
குறிப்பாக கர்ப்பப்பை நோய்களை கட்டுப்படுத்துவதில் மெட்டி முக்கிய இடம் வகிக்கின்றது. பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
நமது முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த விசயங்களையே அறிமுகம் செய்கின்றனர். ஒரு போதும் தகுந்த காரணமின்றி எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கபபடுவதில்லை.
கர்ப்பத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் காலில் அணிந்திருக்கும் மெட்டி துணைப்புரிகின்றது.
கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடலில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் குறிப்பாக கர்ப்பிணி பெண்களது உடல் பிரச்சினைகளை இது சரிசெய்கின்றது.
ஆகையால் பெண்கள் காலில் மெட்டி அணிவது சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கின்றது. இதுவே திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணியவதன் அறிவியல் காரணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |