குளிர்காலத்தில் மூட்டு வலி வர காரணம் என்ன? தீர்வு இதோ
குளிர்காலத்தில் மூட்டு வலி வருவதற்கான காரணங்கள் மற்றும் அதை குறைப்பது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
குளிர்காலம் இதமாக இருந்தாலும் பல பிரச்சனைகளையும் கூடவே தரும். இந்த பருவத்தில் சளி, இருமல், காய்ச்சல் மட்டுமின்றி பலர் மூட்டு வலி பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள். இது மிகவும் வேதனையானது. இதனால் அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாமல் போகிறது. எனவே இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சமாளிக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் மூட்டு வலி வருவதற்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மூட்டு வலி வர காரணம் என்ன?
குளிர்காலத்தில் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். குளிர்ந்த காற்று காரணமாக தசைகள் விரிந்து சுருங்க ஆரம்பிக்கும். இதனால் விரைப்பு மற்றும் வலி ஏற்படும்.
- காற்றழுத்தம் குறையும்போது மூட்டுகளுக்கு இடையே இருக்கும் குருதெலும்பானது கடினமாகிறது. இதனால் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. அதுபோல குளிர் அதிகரிக்கும் போதும் மூட்டுகளில் இடையே இருக்கும் திரவம் திடமாக மாற தொடங்கும். இதநாளும் மூட்டுகளில் வலி ஏற்படும்.
- அதுபோல குளிர்காலத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும் போது உடலில் ரத்தநாளங்கம் சுருங்கி, ரத்த ஓட்டம் குறையும். இதனால் மூட்டு வலி ஏற்படுகிறது.
- குளிர்காலத்தில் உடல் செயல்பாடுகள் குறைவாக இருப்பதால் விறைப்பு மற்றும் மூட்டு வலிக்கு வழி வகுக்கும்.
- குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.
மூட்டு வலியை தடுப்பது எப்படி?
1. உடற்பயிற்சி செய்யுங்கள்: குளிர்காலத்தில் மூட்டு வலி வராமல் இருக்க, தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் இதற்காக நீங்கள் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருந்தபடியே யோகா, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யுங்கள் இப்படி செய்வதன் மூலம் மூட்டு வலி குறையும்.
2. சூடான நீரில் குளிக்கவும்: குளிர்காலத்தில் மூட்டு வலி பிரச்சனை குறைக்க சூடான நீரில் குளியுங்கள் குளிர்ந்து நீரில் குளித்தால் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
3. குளிர்கால ஆடைகளை அணியுங்கள்: குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று காரணமாக மூட்டு வலி ஏற்படும். எனவே உங்களது உடலை சூடாக வைத்துக் கொள்ள குளிர்கால ஆடைகளை அணியுங்கள். அதுவும் குறிப்பாக ஏற்கனவே மூட்டு வலிகள் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காலத்தில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
3. சமசீர் உணவு உண்ணுங்கள் : குளிர்காலத்தில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்த வைட்டமின் டி, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.
4. நீரேற்றமாக இருங்கள்: பலர் குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதை தவிக்கிறார்கள். ஆனால் இந்த பருவத்தில் ஏற்படும். இதன் காரணமாக வறண்ட காற்று உடலை சோர்வாக்கும். எனவே குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |