5ஜி போன் வாங்கினால் ஏற்படும் சிக்கல்.... இந்தியர்களே இந்த பிழையை செய்யாதீர்கள்!
நாளுக்கு நாள் புதிய புதிய மொபைல் சந்தையில் விற்பனையாகி வருகின்றது. நாம் மொபைல் வாங்கும் முன்னர் ஒரு சில விடயங்களை நன்கு அவதானிக்க வேண்டும்.
குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்குவது ஏன் பயனளிக்காது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன்கள் இன்றைக்கு அவசியமாகிவிட்டன . இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

5ஜி இணைப்பு அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எரியூட்டப் போகிறது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்தியாவில் புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு விலை வரம்பிலும் 5G சாதனங்கள் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கின்றன.
இப்போதைக்கு இது ஏன் சிறந்த முடிவாக இருக்காது?
நீங்கள் இந்தியாவில் இப்போது ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.
முதல் விஷயம், அடுத்த 2 ஆண்டுகளுக்கு 5G நெட்வொர்க்குகள் உங்களுக்கு வராமல் போகலாம்.
அதற்கான வாய்ப்பே இங்கு அதிகமாக இருக்கிறது. உங்கள் கைகளில் 5G ஸ்மார்ட்போன் வேண்டும் என்பதற்காக மட்டுமே நீங்கள் மேம்படுத்துகிறீர்கள் என்றால், அது இப்போதைக்குச் சிறந்த முடிவு அல்ல. இது சில பல முக்கிய காரணங்களால் குறிப்பிடப்படுகிறது.
முதலாவதாக, இந்தியாவில் தற்போது நேரடி 5G நெட்வொர்க்குகள் இல்லை.
மேலும், நீங்கள் ஒரு மெட்ரோ நகரத்தில் இல்லை என்றால், குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5G சேவைகளைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கவே வேண்டாம்.
பின்னர், 5G வந்தாலும், நிச்சயமாக, அதன் திட்டங்கள் அதிக நன்மைகளுடன் அதிக விலையில் தான் தொகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இவை விலை உயர்ந்ததாக இருக்கும். நீங்கள் நல்ல வேகத்தைப் பெற்றிருந்தால் மற்றும் வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற்றிருந்தால், நீங்கள் 4G திட்டங்களை வாங்கலாம்.
5G வெளியீடு விரிவுபடுத்தப்பட இன்னும் பல காலமாகலாமா?
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் 4G நெட்வொர்க்குகளை பரப்புவதற்கு இந்தியா பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4Gயை விரிவுபடுத்தும் பணியில் இன்னும் ஈடுபட்டுத் தான் வருகிறது.
5ஜி அறிமுகத்திற்குப் பின்னர் ஒரு வருடத்தில் 5G வெளியீடு விரிவுபடுத்தப்படவும் வாய்ப்பில்லை.
5G நெட்வொர்க்குகள் உங்களை அணுகுவதற்குக் கணிசமான நேரம் எடுக்கும் என்பதே உண்மையாக இருக்கிறது.
வெறும் பெயருக்காக ஒரு 5G சாதனத்தை ஆடம்பரமாக வாங்கி, பயனளிக்கலாம் இருப்பதற்குப் பதிலாக நீங்கள், 4ஜி உடன் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போனை அதே விலையில் வாங்கி பயன்படுத்தலாம்.