Non-Stick Pan கைப்பிடியில் துளை ஏன் இருக்கிறது? தெரிந்தால் நீங்க ஜீனியஸ்
நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தும் நாம், அதன் கைப்பிடிகளில் உள்ள துளைகளை பெரிதாக பார்த்திருக்க மாட்டோம்.
Non-Stick Pan
ஆரம்ப காலத்தில் சமையலறைகளில் மண்சட்டிகள், சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதிலும் புதிய புதிய வடிவங்களில் பல பாத்திரங்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இவை பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதால் மக்கள் இந்த பாத்திரங்களை வாங்குகிறார்கள்.

மிக முக்கியமாக தோசை, சப்பாத்தி போன்றவற்றை எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி, ஒட்டாமல் சுலபமாக சமைக்கும் வகையில், தற்போது நான்ஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் தவா ஆகியவை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இதில் நான்ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தும் போது அதன் கைப்பிடிகளில் உள்ள துளைகளை பெரிதாக பார்த்திருக்க மாட்டோம். அப்படியே கவனித்திருந்தாலும், அது வெறும் வடிவமைப்பு அல்லது ஆணியில் தொங்கவிடுவதற்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டு கவனிக்காமல் விட்டிருப்போம்.
ஆனால், அந்த துளை தொங்கவிடுவதற்கு மட்டும் கிடையாது. இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அதனை முழமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

துளை இருப்பதன் காரணங்கள்
நான்ஸ்டிக் பேன்களில் உள்ள இந்த துளைகள் சுவரில் தொங்கவிட பயன்படும் அதேநேரத்தில், இது இடத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது. இதனால் பாத்திரங்களை எளிதில் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக, நீங்கள் பேனை கழுவி தலைகீழாக தொங்கவிட்டால், அதில் உள்ள தண்ணீர் விரைவாக வடிந்துவிடும். இது தண்ணீர் தேங்குவதைத் தடுத்து, Pan விரைவாக உலர வைக்க உதவும்.

மேலும், ஈரமாக இருந்தால் வரும் வாசனை மற்றும் துருப்பிடிப்பதில் இருந்து பாதுகாக்கிறது. பாத்திரத்தில் கைப்பிடிகளில் சமைக்கும் போது ஒரு கரண்டி அல்லது கரண்டி துளைக்குள் சிக்கிக்கொள்ளும் வகையில் துளைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது எண்ணெய் அல்லது காய்கறிகள் கீழே சொட்டுகின்றன மற்றும் எரிவாயு சுத்தமாக இருக்கும்.
ஆனால் எல்லா பாத்திரங்களிலும் இது இல்லை, சில மாடல்களில் மட்டுமே. இந்த துளை வாணலி (கடாய்) கைப்பிடியின் பாரத்தை சிறிது குறைக்கிறது.
வெப்பத்தைத் தக்கவைக்கும் திறனைக் குறைக்கிறது. அதாவது பாத்திரத்தை பிடித்தால் சிறிது குறைவான வெப்பத்தை உணரக்கூடும். மேலும், கடாயை வடிவமைக்கும் போது கைப்பிடி மோல்டிங், தொங்கும் சோதனைகள் மற்றும் தர சோதனைகளுக்கு இந்த துளை பயனுள்ளதாக இருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |