ஆண்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட இது தான் காரணமாம்! எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை என்று சொன்னால் மிகையாகாது.

சாணக்கியர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி. அதில் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோட்பாடுகள் பற்றி சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் ஆண்கள் திருமணத்தை மீறிய உறவில் ஈடுப்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமையும் விடயங்கள் குறித்தும் எச்சரித்துள்ளார்.
அனைத்து மதங்களுமே திருமணத்துக்கு புறம்பான உறவுகளை கொடிய பாவமாகவே கருதுகின்றது. ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்கு சாணக்கியர் கூறும் முக்கிய காரணங்கள் பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
இளம் வயது திருமணம்

சாணக்கியரின் கூற்றுப்படி இளம் வயதிலேயே திருமணம் செய்யும் ஆண்கள் பெரும்பாலும் முதிர்ச்சியின்மையினாலோ திருமணத்தின் மனத்துவம் குறித்த அறியமை காரணமாகவோ திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக அவர்கள் மனதளவில் தயாராக போது திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்வதால், காலப்போக்கில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், சூழல்கள் மற்றும் ஒரு புதிய உறவின் மீதான ஆசையை தூண்டுகின்றது.
உடல்ரீதியான நெருக்கம் குறைவது

பெரும்பாலான திருமண உறவுகளில் ஆரம்பத்தில் இருக்கும் நெருக்கம் ,ஆசை,காதல் என்பன காலம் செல்ல செல்ல குறைய ஆரம்பிக்கின்றது. மேலும் உடல் ரீதியான நெருக்கம் குறையும் போது ஆண்கள் வேறு பெண்களின் மீது ஈர்ப்புக்கொள்கின்றார்கள்.
திருமண பந்தத்தில் பல நேரங்களில், வெட்கம் அல்லது தயக்கம் காரணமாக உடல் நெருக்கம் பற்றி தம்பதிகள் கலந்துரையாடுவது கிடையாது. இதுவே ஆண்கள் திருமணத்துக்கு புறபம்பான உறவில் ஈடுப்பட முக்கிய காரணமாக இருக்கும்.
குழந்தைகள் பிறந்த பிறகு கவணவனை கவனிக்காமை

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் முன்னுரிமைகள் மாறுவது வழக்கம் தான் ஆனால் அது ஆண்களிள் வெளியில் தங்களின் துணையை தேடிக்கொள்வதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
கணவன் உறவில் தங்களின் முக்கியத்துவத்தை இழப்பதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் உணரத் தொடங்குவே இவ்வாறான திருமணத்துக்கு புறம்பான உறவுகள் ஏற்பட காரணமாகிவிடுகின்றது.
பிற பெண்களின் மீதான ஈர்ப்பு

சாணக்கிய நீதியில் அடிப்படையில், ஆண்களின் மனம் நிலையற்றது என்றும், அவர்கள் எங்காவது புதிதான, உற்சாகமான அல்லது கவர்ச்சிகரமான ஒரு பெண்ணை காணும் போது அவர்கள் மீது காதல் கொள்வதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இது ஒரு சில ஆண்களுக்கு இயல்பிலேயே காணப்படுகின்றது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
ஆனால் இந்த ஈர்ப்பு நிரந்தரமானது அல்ல அது பெரும்பாலும் அவர்களுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தும். இதனால் இந்த தற்காலிக ஈர்ப்பை தவிர்க்க வேண்டுமென்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
சுயக்கட்டுப்பாடு இல்லாமை

சாணக்கிய நீதியின் அடிப்படையில், பெரும்பாலான ஆண்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட முக்கிய காரணம் சிறுவயதில் இருந்தே எந்த விடயத்திலும் சுயகட்டுப்பாடு இல்லாமையே ஆகும். ஒரு மனிதனுக்கு சுயக்கட்டுப்பாடு இல்லாதபோது, அல்லது அவன் தவறான சூழலில் வாழும்போது, அவர்கள் திருமணம் மீறிய உறவுகளை ஈடுபடுவதில் ஆச்சரியம் இல்லை. சுய ஒழுக்கம் இருந்தால் இவ்வாறான உறவுகளுகள் தானாகவே ஒழிந்துவிடும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |