திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்கு இது தான் காரணமாம்... எச்சரிக்கும் சாணக்கியர்
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இதனை பின்பற்றிய பலரும் வாழ்வில் வெற்றியடைந்தமைக்கான சான்றுகளும் இருக்கின்றன.
அந்தவகையில் சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் மற்றவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி எதிர்பாலார் மீது ஈர்ப்பு ஏற்படுவது மிகவும் இயல்பான விடயம்.
ஆனால் இந்த ஈர்ப்பு திருமணத்துக்கு பின்னர் ஏற்படுவது தான் சிக்கல்களை தோற்றுவிக்கும் இந்த ஈர்ப்பு வரம்பு மீறினால் அது நிச்சயம் பிரச்சனையாகிவிடும். இது திருமண உறவில் நிரந்த பிரிவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
சாணக்கிய நீதியின் அடிப்படையிலும் அனைத்து சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரமும் திருமணத்திற்கு புறம்பான உறவு ஒரு கொடிய பாவமாகவே பார்க்கப்படுகின்றது.
சாணக்கியரின் கருத்துப்படி ஒரு ஆண் அல்லது பெண் தனது துணையை தவிர மற்றவர்கள் மீது ஆர்வம் காட்டுவதற்கு மிகவும் இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் இணைவது தான் முக்கிய காரணம் என்கின்றார்.
ஒருவரை பற்றி ஒருவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் பார்த்தவுன் ஏற்படும் ஈர்ப்பால் காதல் செய்து விரைவில் திருமண உறவில் இணைபவர்களுக்கு குறுகிய காலத்திலேயே துணையின் குறைகள் பற்றி தெரியவரும் இதன் காரணமாக தங்களுக்கு பொருத்தமாக யாரையாவது சந்திக்கும் போது ஈர்ப்பு ஏற்படுகின்றது.
திருமண உறவில் உடல் ரீதியானவும் மன ரீதியாகவும் திருப்தி கிடைக்காத போது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஏற்படுகின்றது. இது ஒரு முக்கிய காரணம் என சாணக்கியர் வலியுறுத்துகின்றார்.
திருமண உறவில் நம்பிக்கை குறையும் போது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. தங்களின் துணை மீது நம்பிக்கை இல்லாமல் போவதும் மற்றவர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
மேலும் சாணக்கியரின் கருத்துப்படி திருமண உறவில் சுவாரஸ்யம் மற்றும் மகிழ்ச்சி குறையும் போது திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஏற்படுகின்றது என்கின்றார்.
எவ்வாறாயினும் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் மற்றவர்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பு எல்லையை கடக்கும் போது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியேற்படும்.
திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் கொடுத்தாலும் பின்னர் உங்களின் மரியாதை மற்றும் நிம்மதியை வலுவாக பாதிக்கும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |