கோலிவுட்டில் அடுத்த விவாகரத்தா? கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகாவுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில் அவர் தற்போது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி இணையத்தில் வைராலகி வருகின்றது. இது குறித்து ஹன்சிகாவின் கணவர் சொஹைல் விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி
தனுஷ் நடித்த ‛மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அதன்பின்னர், ‛ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா, 2022ம் ஆண்டு டிசம்பரில் தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஹன்சிகாவின் திருமண செய்தி வெளியானதுமே, சோஹேல் பற்றி இணையத்தில் பல செய்திகள் வெளி வந்தன. தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகா மோத்வானிவை திருமணம் செய்து கொள்கிறார் என்றும் இணையத்தில் செய்தி பரவியது.
சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகாதான் முக்கிய காரணம் என்றும் தகவல் வெளியானது. அது உண்மை இல்லை, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள், அது தான் உண்மை'' என ஹன்சிகா கண்ணீர்மல்க பேசி இருந்தார்.
கணவரை பிரிந்த வாழும் ஹன்சிகா?
இந்த சூழலில் திருமணமான சில மாதங்களிலேயே ஹன்சிகா மற்றும் சோஹேல் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லையாம்.
ஹன்சிகா, சொஹைல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு வீட்டில் வசித்து வருவதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறாராம். சொஹைலோ தன் பெற்றோருடன் வசித்து வருகிறாராம். சில மாதங்களாகவே அவர்கள் ஒன்றாக இல்லை என கூறப்படுகிறது.இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக பேசப்படுகிறது.
இது குறித்து ஹன்சிகா இதுவரையில் எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் ஒரு பிரபல ஊடகம் சொஹைல் கதூரியாவிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் இது உண்மை இல்லை என்று மட்டும் மெசேஜ் செய்துள்ளார்.
பிரிந்து வாழ்வதாக பேசப்படுவதில் உண்மை இல்லையா விவாகரத்து செய்தியில் உண்மை இல்லையா என்பதை சொஹைல் தெளிவாக தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும் ஹன்சிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக வரும் செய்திகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் ரவி மோகம் மற்றும் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சையை தொடர்ந்து, இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
