குடும்பத்தையே மறைத்து வைத்த கவுண்டமணி - காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் பிரபலமாக இருந்த கவுண்டமணி தனது குடும்பத்தை மறைத்து வைத்தற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவுண்டமணி
தமிழ் சினிமாவில் 80 முதல் 90 வரையிலான காலகட்டத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில், காமெடியென்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
இவர்களின் பெயரை சொல்லும் போதே இரண்டு பேரின் பெயரையும் சேர்த்துதான் இன்றளவிலும் கூறுவது வழக்கம். அந்தளவிற்கு இவர்கள் இருவரும் காமெடியினால் பலரையும் கவர்ந்துள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் கவுண்டமணி தனது குடும்பத்தை மறைத்து வைத்ததற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடும்பத்தை மறைத்து வைத்த காரணம்
தனது குடும்பத்தினரை ஊடகத்திலேயே மறைத்து வைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்புகூட கவுண்டமணி மகளின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதை தவிர்த்து அவரது குடும்பம் பற்றிய எந்தத் தகவல் தெரியவருவதில்லை.
"நடிகர்கள் தங்களது முகம் மக்களிடம் சென்று சேர வேண்டுமென்பதற்காக மட்டுமே நடிக்கிறார்கள். அதற்காக நிறையவே கஷ்டப்படுவார்கள். ஆனால் ஒருகட்டத்தில் அதே முகத்தை மக்களிடமிருந்து ஒளித்துவைத்துக்கொள்ள படாதபாடு படுகிறார்கள்.
கவுண்டமணியும் அப்படித்தான். அவரைப் பொறுத்தவரை திரையில் இருக்கும் கவுண்டமணியை மக்கள் தெரிந்துகொண்டால் போதும். அசல் கவுண்டமணியை தெரிந்துவைத்து மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கொள்கையில் இருப்பவர்.
முக்கியமாக மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நினைப்பவர். அதனால்தான் தனது குடும்பத்தையும் மீடியா வெளிச்சத்தில் படாமலேயே வைத்திருக்கிறார். அப்படி இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான்" என பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் தெரிவித்துள்ளார்.