சஃபாரி வாகனத்தில் சிங்கங்கள் ஏன் மனிதர்களைத் தாக்குவதில்லை தெரியுமா?
பொதுவாகவே சிங்கம் மிகவும் ஆக்குரோஷம் நிறைந்த வலிமை வாய்ந்த விலங்காகவும் பயம் என்பதை துளியும் அறியாத விலங்காகவும் இருப்பதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன்.
ஆனால் காட்டிற்குள் சஃபாரி வாகனத்தில் சவாரி செய்யும் போது சுற்றிலும் சிங்கங்கள் இருக்கும், ஆனால் அது சவாரி செய்யும் வாகனங்களை தாக்குவதில்லை. இது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
ஒரு சிங்கம் ஒரு தனி மனிதனைப் பின்தொடர்வது பற்றி இருமுறை யோசிக்காது, ஆனால் ஒரு மோட்டார் வாகனம் எந்த விலங்குகளையும் விட பெரியதாகவே இருக்கின்றது. இதுவும் சிங்கம் அதனை தாக்காமைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஏன் மனிதர்களைத் தாக்குவதில்லை?
சிங்கம் பொதுவாக இரையை வேட்டையாடுவதற்காகவே தனது ஆக்குரோஷத்தை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக காடுகளில் உள்ள பெரும்பாலான விலங்குகள் இயல்பாகவே மனிதர்களை தாக்குவது கிடையாது. ஒரு சிங்கம் உணவின்றி பல நாட்கள் இருக்கும் போது மாத்திரமே அது மனிதர்களை வேட்டையாட முற்படும்.
விலங்குகள் எப்பொழுதும் அவற்றின் உள்ளுணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. குறிப்பாக உயிர் வாழ்தலில் கவனம் செலுத்துகின்றன.
உணவைக் கண்டுபிடிப்பது, தங்கள் வாழ்விடங்களை காப்பது, குழந்தைகளை பராமரிப்பது போன்ற விடயங்களில் தான் விலங்குகள் அதிக அக்கறை செலுத்துகின்றது.
இன்னும் சொல்லப்போனால் காட்டு விலங்குகள் மனித தொடர்புகளை தவிர்க்கவே அதிகம் விரும்புகின்றன. காட்டுக்குள் தொடர்ச்சியாக பல சவாரி வாகனங்கள் சிங்கங்களுக்கு முன்னிலையில் வந்து போவதால் சிங்கங்களுக்கு பழக்கமாகிவிட்டன. அதுவுமி் சிங்கங்கள் தாக்காமைக்கு காரணமாக இருக்கின்றது.
மனிதர்களால் சிங்கங்களுக்கு தீங்கு ஏற்படும் நிலையில் தான் அவை வேட்டையாட முயற்சிக்கும். இதுவும் இரைக்காக அல்ல பாதுகாப்பு நோக்கம் கருதியே அவ்வாறு செய்கின்றன. சிங்கங்கள் சவாரி வாகனங்களை அச்சுறுத்தலாக பார்ப்பதில்லை இதனால் தான் அவை ஒருபோதும் இந்த வாகனங்களை தாக்குவது கிடையாது.
மேலும் சவாரி ஓட்டுநர், விலங்கு பாதுகாவலர்கள் உங்களுடன் இருப்பார்கள். சவாரி வாகனத்தில் உள்ள அனைவரையும் விலங்குகள் தனித்தனியாக பார்ப்பதில்லை. இதுவே சிங்கங்கள் சவாரி வாகனங்களை தாக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
இருப்பினும் காட்டு விலங்குகளுடன் சவாரி செய்யும் போது சில அடிப்படை வழிமுறைகளை பின்பற்றுவதுடன் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம். முக்கியமாக அவற்றை அச்சுறுத்தும் எந்த செயல்களையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |