குறட்டைப் பிரச்சினையில் அவதிப்படுகிறீர்களா?
இரவு உறக்கம்தான் மனிதனுக்கு நிம்மதியைக் கொடுக்கும். நாள் பூராகவும் வேலை செய்த உடல் இரவில் தான் சற்று ஓய்வெடுக்கும். அவ்வாறு அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அருகில் யாராவது சத்தமிட்டு குறட்டை விட்டால் எப்படி இருக்கும். உறக்கமே கலைந்துவிடும்.
எதனால் இந்த குறட்டைப் பிரச்சினை ஏற்படுகிறது?
அதிகமான உடல் எடையின் காரணமாகவும், வயது அதிகரிப்பின் காரணமாகவும் குறட்டை பிரச்சினை வரலாம்.
குடிப்பழக்கம் இருத்தல்.
மூக்கிலிருக்கும் மெல்லிய தடுப்புச்சுவர் வளைவதால்.
தொண்டையிலும் அடிநாக்கிலும் தசைநார்கள் வலுவிழப்பதால்.
தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதால்.
ஒருவித ஒவ்வாமையும் சைனஸ் பிரச்சினையும் ஏற்படுவதால்.
தொண்டையில் உள்ள சதை தடிப்பதாலும் குழந்தைகளின் உள்நாக்கு நீண்டு காற்று செல்லும் வழியை தடுப்பதாலும் குறட்டை ஏற்படுகிறது.
இந்த குறட்டையினால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகின்றன?
குறட்டையினால் சரியாக தூங்கியிருக்க முடியாது. இதனால் தூக்கம் கண்ணை சொருகும்.
இதய தசைகள் விரியும்.
இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
மாரடைப்பு, பக்கவாதம் என்பவை ஏற்படும்.