உட்காரும் போது கால் ஆட்டுவீங்களா? அப்போ அதற்கு இது தான் காரணம்- தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக அமரும் போது, அல்லது படுக்கும் போது கால்களை அசைப்பது மற்றும் வேகமாக ஆட்டுவது பலரின் பழக்கமாக இருக்கின்றது.
கால்களை அசைப்பது அல்லது ஆட்டுவது தொடர்ந்து செய்யும் பொழுது அது நம்முடைய அன்றாட பழக்கமாக மாறுகின்றது. இது இடம், பொருள் , ஏவல் அறியாமல் திகழ அதிகமான வாய்ப்புகளும் இருக்கின்றது.
அந்த வகையில், சிலர் முழங்கால்களை அசைத்து அல்லது கால்களைத் தட்டுவது போல் அசைப்பார்கள். இதனை பெரும்பாலும் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் செய்வார்கள்.
இது போன்று நடந்து கொள்வது தீங்கற்ற பழக்கம் என்றாலும் அது ஒருவரின் மனநிலையை கணிக்க உதவியாக இருக்கின்றது.
அப்படியாயின் எப்படி கால்களை அசைத்தால் அவர்களுக்கு என்ன மாதிரியான கோளாறுகள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
உடல்நல பாதிப்புகள்
எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கால்களை அசைப்பது சாதாரண பழக்கமாக இருக்கலாம். ஆனால் இதனையே தொடர்ச்சியாக செய்வார்கள் என்றால் அது ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
இது கால்களை நகர்த்துவதற்கான தவிர்க்க முடியாத தூண்டுதலால் வகைப்படுத்தப்படும் நரம்பியல் கோளாறு என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கால்கள் அதிகமான நடுங்கும் பொழுது அது கவலை அல்லது மன அழுத்தம் கோளாறுகளை வெளிகாட்டுகின்றது. இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் முறையாக சிகிச்சையளிக்காத பட்சத்தில் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) ஏற்படும்.
இதனால் குறிப்பிட்ட சிலரின் கவனம் சிதற ஆரம்பிக்கும். கட்டுபடுத்தும் போது கால்களில் நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
பொது இடங்களில் தொடர்ந்து கால்களை ஆட்டும் பொழுது அவர்கள் பொறுமையில்லாதவர்களாக காட்டப்படுவார்கள். மற்றும் பல செயல்பாடுகளைக் கையாள்வதில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |