பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்னு தெரியுமா? உண்மை இது தான்
பொதுவாகவே தொன்று தொட்டு பாம்பு புற்றுக்குள் பால் ஊற்றுவதும் முட்டை வைப்படும் வழக்கமாக இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.
இந்து சாஸ்திரத்தை பொருத்தவரையில் பாம்புகள் கடவுளாகவே பார்க்கப்படுகின்றன.காலங்காலமாக பாம்புக்கு பால் மற்றும் முட்டை வைக்கப்படுவது ஏன் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
உண்மையில் பாம்புகள் விஞ்ஞான ரீதியாக பார்த்தால் முட்டையையும் பாலையும் குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணம்
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள், அதாவது மனிதர்களை விட பாம்புகள் அதிகமாக காணப்பட்டன.
ஆனால் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இல்லை. எனவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தனர். அதன் விளைவாக தோன்றியதே இந்த வழக்கம்.
அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம்.
பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது, எனவே அதனால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
பாம்புகளின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது என்பதே அறிவியல் உண்மை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |