எறும்புகள் எப்போதும் வரிசையாக செல்வது ஏன்னு தெரியுமா?
பொதுவாகவே எறும்புகளை தான் சுறுசுறுப்புக்கு உதாரணமாக கூறுவார்கள். இது எந்நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும்.
அவை லட்சக்கணக்கில் குழுக்களாக வாழ்வதால் எறும்புகள் காலனிகள் என அழைக்கப்படுகின்றன. எறும்புகளின் இனம் பூமிக்கு 2,00000 லட்சம் ஆண்டுகள் பலமை வாய்ந்தது.
டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து எறும்புகள் இனம் இன்று வரை நீடித்து வருகின்றது. எறும்புகள் எங்கு சென்றாலும் வரிசையாகவே செல்வதை அவதானித்திருப்பீர்கள். இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
எறும்புகள் வரிசையில் செல்வதற்கும் திரும்பி வரும் போது ஒன்றுடன் ஒன்று சந்தித்துக்கொள்வதற்கும் அறிவியல் ரீதியாக என்ன காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
வரிசையாக செல்வது ஏன்?
எறும்புகள் எப்பொழுதும் கூட்டணியாக தான் வாழும், தங்களின் வசிப்பிடம் அல்லது இனத்தைப் பொருத்து குழுக்களாக வாழும். எனவே, உணவு தேட எறும்புகள் செல்லும் பொழுது "பீரோமோன் (Pheromone)" என்னும் இரசாயனத்தை வழியில் விட்டுச்செல்லும்.
இதனால் முதலில் செல்லும் எறும்பின் இரசாயனத்தை, அதன் பின் வரும் எறும்பு பின் தொடரும், தானும் இரசாயனத்தை விட்டுச் செல்லும். இதனால், அனைத்து எறும்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செல்லும்.
எனவே, அவை தங்களின் வழித்தடத்தை உறுதிசெய்து கொண்டு, திரும்பி வரும் பொழுதும் அவ்வாறே இரசாயனத்தை உமிழ்ந்து கொண்டு செல்லும்.
இதனால், அவை வழி மாறாமல் பயணிக்கும், எதிராளி யாராவது வந்தால் கூட எளிதாக அவை அடையாளம் கண்டுவிடும், மேலும் அதை கூட்டமாக எதிர் கொள்ள இவற்றுக்கு அந்த இரசாயன வித்தை உதவும்.
உரையாடல் கொள்ளும் எறும்புகள் எறும்புகள் தங்களுக்குள்ளான கருத்துப் பரிமாற்றத்தை ஒன்றுக்கொன்று மோதி, அல்லது தங்களின் கால்களை உரசி வெளிப்படுத்தும், சைகை மொழி போல.
அவை, தங்களின் முகத்தில் இருக்கும் கொடுக்குகள் மூலமாக இரசாயனத்தை உமிழ்வதில் கூட, கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்துபவை.
அவை பல விதமான வாசனை வேறுபாடுகளைக் கொண்டது. எனவே, அந்த குறிப்பிட்ட இரசாயனம் என்ன தகவலை உணர்த்துகிறது, என்பதை அந்த குழுக்களில் இருக்கும் எறும்புகள் அறிந்துகொள்ளும்.
எதிரே வரும் எறும்புகளை மோதுவது எதற்காக என்றால், அவை வந்த வழி பாதுகாப்பானது தானா, அங்கே உணவு இருக்கிறதா, வேறு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை இன்னொரு எறும்புக்கு தெரியப்படுத்துவதற்காகத்தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |