ஒரே வாரத்தில் கூந்தல் அடர்த்தியாகணுமா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் கூந்தல் அடத்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு இன்றைய காலத்தில் பொடுகு, முடி உதிர்தல் மற்றும் போன்ற முடி தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு சந்தையில் கிடைக்கும் பல தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது தற்காலிகம் தான்.
இதற்கு இயற்கை முறையில் கூட தீர்வு காண முடியும். அந்த வகையில் முடியை இயற்கையாக அடர்த்தியாக வளர வைக்க கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?
கூந்தலை இயற்கையான முறையில் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள கற்றாழை பெரிதும் துணைப்புரிகின்றது.
இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் கூந்தலை மென்மையாகவும் பளப்பளப்பாகவும் வைத்திருக்கின்றது.
கற்றாழை சாற்றை கூந்தலில் நன்றாக தடவி பின்னர் தலைமுடியில் 30-45 நிமிடங்கள் வைத்திருங்கள், பின்னர் கூந்தலை குளிர்ந்த நீரில் கழுவினால் தலைமுடி உடனடியாக பளபளப்பாக மாறும்.
கற்றாழை ஜெல் உடன் சிறிதளவு தேன் சேர்த்து நமது தலைமுடியில் தடவலாம். இந்தக் கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் வலிமையடைவதுடன்,முடியதிர்வை கட்டுப்படுத்தலாம். மேலும் விரைவில் கூந்தல் அடர்த்தியாவதை கண்கூடாக அவதானிக்க முடியும்.
தேங்காய் எண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெலை சேர்த்து இந்த கலவையை தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊறவிடவும்.
பின்னர் கூந்தலை நன்றாக வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்தால் கூந்தல் அடர்தியாவதுடன் கூந்தல் உதிர்வதும் கட்டுக்குள்வரும்.
கற்றாழை புரோட்டீன் நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ என்பன நிறைந்து காணப்படுவதால் கூந்தல் பிரச்சினைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |