அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருவது ஏன்னு தெரியுமா? பலரும் அறியாத தகவல்
பொதுவாக மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுவதும் பல இன்ப, துன்பங்களையும் வெற்றி, தோல்விகளையும் கடந்து தான் போக வேண்டும்.
அந்தவகையில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே வாழ்வில் பல நேரங்களில் அழும் நிலை ஏற்படுகின்றது. அது குழந்தையாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி அழுதால் கண்களில் இருந்து கண்ணீர் வரும்.

வலியால் அழும் போதும் சரி, கவலையில் அழும் போதும் சரி கண்களில் இருந்து இவ்வளவு கண்ணீர் வருகின்றதே... அது ஏன் வருகின்றது, எங்கிருந்து உற்பத்தியாகின்றது என்று சிந்திததுண்டா? கண்ணீர் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமாக தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கண்ணீர் வர காரணம்?
கண்களில் தூசி, அழுக்கு, அல்லது பிற வெளிப் பொருட்கள் விழும்போது, அவற்றை வெளியேற்றவும், கண்களை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவுமே கண்ணீர் சுரப்பிகள் காணப்படுகின்றது.

மேலும் கண்களை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் கண்ணீர் உதவுகிறது. நம் இரு கண்களுக்கு மேல் அடுக்கின் ஒரு ஓரத்தில் உள்ள Lacrimal Gland என்ற சுரப்பியில் இருந்து தான் கண்ணீர் உற்பத்தியாகின்றது.
இந்த சுரப்பி தான் நாம் அழும் போது கண்களில் கண்ணீர் வர காரணமாக இருக்கிறது. சோகம், வலி, பயம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சி தீவிரமான நிலையில் இருந்தாலும் மூளை கண்ணீர் சுரப்பிகளைத் தூண்டும். அதன் போது வெளிவரும் கண்ணீரை வெளியேற்ற ஒரு பைப் போன்ற அமைப்பு நம் மூக்கு பகுதியில் இருக்கிறது.

இந்த அமைபு Puncta என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த அமைப்பானது நாம் அதிகமாக அழும் போது உருவாகும் அதிகப்படியான கண்ணீரை வெளியேற்ற உதவுகின்றது.
அது தான் நாம் அதிகமாக அழும் போது சில நேரங்களில் மூக்கில் இருந்து தண்ணீர் வருவதற்கு காரணமாகவும் இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |