மொபைல் போன் சார்ஜர் ஏன் வெள்ளையாக இருக்கு தெரியுமா?
தற்போதைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு இல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஒருவர் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கூட இருப்பார்கள். ஆனால் கையில் ஒரு ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பதை பார்ப்பது குறைவு.
இப்படி வாங்கும் ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்வதற்காக கொடுக்கப்படும் சார்ஜர்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.
அந்த வகையில், ஏன் வெள்ளை நிறத்தில் சார்ஜர்கள் செய்து விற்பனை செய்கிறார்கள் என பலரும் யோசித்து இருப்பார்கள். அதற்கான அறிவியல் காரணத்துடன் கூடிய விளக்கத்தை பதிவில் பார்க்கலாம்.
சார்ஜர் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்?
சந்தையில் விற்பனை செய்யப்படும் சில பிராண்டு ஸ்மார்ட் போன்களின் சார்ஜர்களை கருப்பு அல்லது மற்ற நிறங்களில் பார்க்கலாம்.
ஆனால் ஸ்மார்ட் போன்கள் பெரும்பாலும் வெள்ளை நிற சார்ஜர்களை தான் பயன்படுத்துகிறார்கள். ஏனெனின் வெள்ளை நிறம் பிரீமியம் தோற்றத்தை கொண்டிருக்கிறது.
எங்கிருந்து பார்த்தாலும் வெள்ளை நிறம் தெளிவாக தெரியும். ஆப்பிள் போன்ற பிரபலமான நிறுவனங்கள் சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை வெள்ளையாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் இதுவாகும்.
மேலும், வெள்ளை நிற சார்ஜர்களில் அழுக்கு, கீறல்கள் ஏற்பட்டால் உடனடியாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். ஒரு வகையில் இது பாதுகாப்பிற்கான முக்கிய அறிகுறியாகவும் உள்ளது. கருப்பு போன்ற அடர் நிறங்களில் சார்ஜர்கள் வைத்திருந்தால் அழுக்கு, கீறல்கள் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.
வெள்ளை நிற பிளாஸ்டிக்கை உருவாக்குவது இலகுவானது என தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகிறது. சார்ஜர்களை உருவாக்கும் நிறுவனங்கள் இதன் எளிமை செயன்முறையையே பின்பற்றி வருகிறார்கள். அத்துடன் செலவுகள் குறைவாக இருக்கும்.
சார்ஜரை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் போது வெப்பமாகும்.
இதனை வெள்ளை நிறம் உறிஞ்சாது. ஆனால் மற்ற நிறங்கள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால் சார்ஜர் அதிகமாக வெப்பமாக வாய்ப்பு உள்ளது.
கருப்பு சார்ஜர்கள் உள்ளதா?
ஸ்மார்ட் போன் சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கருப்பு நிற சார்ஜர்கள் மற்றும் கேபிள்களை பார்க்கலாம். ஆனால் இந்த நிறத்தில் சார்ஜர் பயன்படுத்தினால் சில சமயங்களில் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஸ்மார்ட் போன்களில் பல பிராண்டுகள் வெள்ளை தவிர்ந்த நிறங்களில் சார்ஜர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். ஆனால் பயனர்கள் பெரிதாக வாங்கி பயன்படுத்தவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
