போன் பேட்டரி வேகமா தீர்ந்து போகுதா? அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?
பொதுவாகவே தற்காலத்தில் சமூக வலைத்தளங்கின் பாவனை மற்றும் அதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைவது கிடையாது.
அந்த வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பலரும் இரவும் பகலும் போன்களில் இன்ஸ்டாகிராம் ரீல்களை பார்பதற்கு பழக்கப்பட்டுவிட்டார்கள் நீங்களும் அப்படி தான் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
என்னவென்றால், உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டாகிராமின் சமீபத்திய எடிஷனை அப்டேட் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை கூகுள் கொடுத்துவருகின்றது.ஒருவேளை இதைச் செய்யாவிட்டால், உங்கள் போனின் பேட்டரி சீக்கிரமே காலியாகிவிடும். இது தொடர்பில் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
அறிக்கைகளின் பிரகாரம் இன்ஸ்டாகிராம் ஆப்பை அப்டேட் செய்யுமாறு ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு கூகுள் கோரிக்கை விடுத்துள்ளது.
தரவுபளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு பாவனையாளர்களின் கருத்துப்படி, இன்ஸ்டாகிராம் தங்கள் டிவைஸ்களில் உள்ள பிற ஆப்களை விட அதிக பேட்டரியை பயன்படுத்துவதாகவும் இதனால் போனை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கிய கூகுள், இதை ஆராய்ந்தபோது, இன்ஸ்டாகிராமில் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு மத்தியில், பல யூசர்கள் பேட்டரி வேகமாக தீர்ந்து போவதைத் தவிர்ப்பதற்கு இன்ஸ்டாகிராமின் பழைய எடிஷனை இன்ஸ்டால் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களின் போன்கள் சூடாகி வருவதைக் கண்டறிந்தனர். அதாவது, பிரச்சினை ஆப்பின் தற்போதைய எடிஷனில் இருக்கின்றது.
இந்த சிக்கல்களைக் கவனித்த கூகுள், அவற்றை நேரடியாக இன்ஸ்டாகிராமிடம் அறிவித்தது. இப்போது, சமீபத்திய அப்டேட்டில் இந்த சிக்கலை சரிசெய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இந்த சிக்கலுக்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தற்போது போனில் அதிகமாக பேட்டரி தீர்ந்து போகவில்லை என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
