இறந்த உடலை ஏன் தனியாக விடக்கூடாது? கருட புராணம் கூறும் உண்மை
மரணமடைந்த உடலை தனியாக வைக்ககூடாத காரணத்தை கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பேசும்பொருளாக வருகின்றது. இது குறித்து இங்கு பார்க்கலாம்.
கருட புராணம்
இந்து மதத்தில் இறந்த உடலை கவனிக்க வேண்டியதை கடைமையாக கருதுகின்றனர். ஒருவர் இறந்து விட்டால் அவரது உடலை தனியாக விட கூடாது என்பதற்காக உடலின் அருகில் அதிகமான நபர்கள் இருப்பார்கள்.
இதற்கான காரணம் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. கருட புராணத்தில் கூறப்பட்டதன் படி இறந்த உடலை தனியாக விடும்போது எதிர்மறை சக்திகள் அதை தன்வசப்படுத்த முயற்சிக்கும். இது பேய்கள் எனவும் கூறலாம்.
இறந்த உடலை இறந்தவரி ஆன்மா சுற்றி இருக்கும். இந்த நேரத்தில் இறந்தவரின் சம்பந்தப்பட்டவர்கள் துக்கத்தை வெளியிடும் போது அது மீண்டும் உடலில் நுழைய முயற்ச்சிக்கும். உடலை தனியாக விடும் போது பிற பூச்சிகள் விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகம்.
இதனால் பல தீங்குகள் வரலாம். குறிப்பிட்ட இந்த விஷயங்கள் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டுமானால் இறந்த உடலை தனியாக விட கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |