ஏய் என்ன கத்துற.... கொதித்தெழுந்த தாமரை! விறுவிறுப்பாகும் ஃபினாலே
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 86 ஆவது நாளான இன்று ஃபினாலே டாஸ்க் நடந்து வருகின்றது.
வெற்றி பெற ஒவ்வொரு போட்டியாளர்களும் போராடி வருகின்றனர்.
தற்போது வீட்டிற்குள் உள்ள 8 போட்டியாளர்களில், ஃபினாலே டிக்கெட்டை வென்று, நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார், இந்த வாரம் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் பிரியங்காவுக்கும், தாமரைக்கும் இடையில் பிரச்சினை வந்தது.
எல்லோரும் கூட்டு சேர்ந்து விளையாடுவதாக சண்டையை தாமரை ஆரம்பிக்கின்றார்.
தேவைப்பட்டால் யாருக்காகவும் நான் விட்டு கொடுப்பேன் என்று தாமரை அடிக்கடி கூறுவார்.
ஆனால் இது வரை அவர் அப்படி செய்தது இல்லை என்று போட்டியாளர்கள் கூறி அவரின் முகத்திரையை கிழிக்கின்றனர்.
பிறகு பிரியங்கா மற்றும் தாமரைக்கு இடையிலான பிரச்சினை பூகம்பமாக வெடிக்கின்றது.
உனக்கு பயம் இல்லை என்னிடம் கத்தாதே என்று இருவரும் மாறி மாறி கத்தி கொள்ளுகின்றனர்.