உங்க இலக்கு என்ன? கேள்வி கேட்ட ஆண்டவரையே கதிகலங்க வைத்த சரவணா விக்ரம்
இறுதிக்கட்டத்தை எட்டும் பிக்பாஸில் இந்த வார நோமினேஷன் பட்டியலில் இருக்கும் போட்டியாளர்களிடம் ஆண்டவர் யார் வெளியேற தயார் என கேள்வியெழுப்பி ஷாக் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் 7
தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணி, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்த காரணத்தினால் வாக்குகள் குறைவு என வெளியேற்றியுள்ளனர்.
அந்த வாரம் நிக்ஷன் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராமல் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.
இந்த முறை வெறும் 3 பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதன்படி விசித்ரா, சரவணா விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் தான் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள். இவர்களில் ஒருவர் தான் இந்த வார இறுதியில் எலிமினேட் ஆக உள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |