டெல்டாவை விட அதிவேகமாக பரவும் Omicron: உலக சுகாதாரத் துறை விடுத்துள்ள எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பு (WHO) Omicron, டெல்டாவை விட வேகமாக பரவுகிறது என்றும் ஏற்கனவே 89 89 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளது என்று கூறுகிறது. எனவே Omicron மாறுபாடு, தீவிர தொற்று ஏற்படுத்தவில்லை என அலட்சியப்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த மாறுபாடு டெல்டாவை மிக அதிக வேகமாக பரவுகிறது என்றாலும், அதனைப் போல் தீவிரமானது அல்ல என்று குறிப்பிட்ட WHO, எனினும் Omicron லேசான தொற்று பாதிப்பு ஏற்படுத்தும் மாறுபாடு என்று அலட்சியம் செய்யாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு, தடுப்பூசிகள் போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு, தென்கிழக்கு ஆசிய நாடுகளை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.
"மாஸ்க் அணிதல், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகள் மூலம் Omicron பரவுவதைத் தடுக்க முடியும். தடுக்க வேண்டும்," என்று WHO தெற்கு பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறினார்.
இதற்கிடையில், சனிக்கிழமை (டிசம்பர் 18) இந்தியா ஓமிக்ரான் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது, தெலுங்கானா மாநிலம் 12 புதிய நோய்த் தொற்றுகளைப் பதிவுசெய்தது, மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்புகள் 20 ஆக உள்ளது. இது தவிர, கர்நாடகா மற்றும் கேரளாவில் முறையே ஆறு மற்றும் நான்கு தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் அதிகமான மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவும் ஓமிக்ரான் தொற்று பரவல் தொடர்பாகவும், தொற்றுநோய் நிலைமையை பகுப்பாய்வு செய்வதற்கும், அமைக்கப்பட்ட கோவிட் குழு, ஓமிக்ரான் பரவலால் மூன்றாவது அலையை இந்தியா சந்திக்க நேரிடும் என்றாலும்,கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை போன்று தீவிரமானதாக இல்லாமல், இதமானதாக இருக்கும் என்று கூறியது.
"இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது நாட்டில் பெரிய அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், இரண்டாவது அலையை விட இது மிதமானதாக இருக்கும். மூன்றாவது அலை கண்டிப்பாக ஏற்படும். தற்போது தினசரி தொற்று பாதிப்பை பொறுத்தவரை, 7,500-ஐ நெருங்கிவிட்டோம். ஒமிக்ரான் டெல்டாவை விட வேகமாக பரவும் நிலையில், தினசரி தொற்று பாதிப்புகள் நிச்சயமாக அதிகரிக்கும்" என்று குழு கூறியது.