யாரெல்லாம் பலாப்பழம் சாப்பிட கூடாது தெரியுமா? குறிப்பாக இவங்க தொடாதீங்க
பொதுவாக அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக பலாப்பழம் பார்க்கப்படுகின்றது.
இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் பலாப்பழத்தில் உள்ள இனிப்பு சுவை தான்.
இந்த பழம் குறிப்பிட்ட சில காலங்களில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.
சில உணவுகள் என்ன தான் சுவையாக இருந்தாலும் குறிப்பிட்ட சிலரால் அதை சாப்பிட முடியாது. இது அவர்களின் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மீறி சாப்பிட்டால் உடலில் பக்க பக்க விளைவுகள் ஏற்படும்.
அந்த வகையில் பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிடகூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிட கூடாது
1. தோலில் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைகளின்றி பலாப்பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் இது பலாப்பழம் அழற்சி பிரச்சனையை அதிகப்படுத்தும்.
2. இரத்தம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது சாப்பிடுவதால் உங்களின் இரத்த பிரச்சனை அதிகரிக்கலாம்.
3. அறுவை சிகிச்சை செய்தவர் பலாப்பழத்தை தொடவே கூடாது. அறுவை சிகிச்சை முடிந்து வந்தவுடன் பலாப்பழம் சாப்பிட்டால் காயம் அதிகமாகி விடும். காயம் குணமாகிய பின்னர் எடுத்து கொள்ளலாம்.
4. கர்ப்பமாக இருப்பவர்கள் மறந்தும் கூட பலாப்பழத்தை எடுத்து கொள்ளகூடாது. ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சியில் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
5. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த பழம், குழந்தையின் வயிற்றில் ஏதாவது கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |