புற்றுநோய்க்கு மருந்தாகும் கோவைக்காய்- யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக இறைச்சி வகைகளை உணவாக எடுத்து கொள்வதிலும் பார்க்க காய்கறிகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதன்படி, உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காயின் குடும்ப வகையில் ஒன்றாக கோவக்காய் பார்க்கப்படுகின்றது.
இந்த கோவைக்காய் மற்றும் அதன் இலைகளை நீரிழிவு நோய்க்கு மருந்தாக கிராமங்களில் பயன்படுத்துகிறார்கள். சிலர் கோவக்காயின் பழத்தையும் சாப்பிடுவார்கள்.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இந்த கோவக்காயை உணவாக உட்க் கொள்கிறார்கள். இதனால் மலச்சிக்கல், கொனேரியா மற்றும் காயங்களின் பாதிப்பு குறைவாக இருக்கும்.
அந்த வகையில் கோவக்காய் சாப்பிடுவதால் வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் கோவக்காய் சாப்பிடலாம்?
1. கோவக்காய் பெரும்பாலும் ரத்த சர்க்கரை அளவு பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடலாம். அத்துடன் கொலஸ்ட்ரால் பிரச்சினையையும் கட்டுக்குள் வைப்பதாக சொல்லப்படுகின்றது.
2. மற்ற காய்கறிகளை விட கோவக்காயில் பீட்டா கரோட்டீன், சிவப்பு நிறமிகள், ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுபடுத்தும் ஆற்றல் ஆகியன உள்ளன. அதிலும் குறிப்பாக, இதய ஆரோக்கியம் முதல் புற்றுநோய் வரையிலான நோய்களுக்கு கோவக்காயை மருந்தாக சாப்பிடுகிறார்கள்.
3. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கோவக்காயை அமிர்தம் என்கிறார்கள். ஏனெனின் பாகற்காய் எந்தளவு சர்க்கரையை கட்டுபடுத்தும் ஆற்றல் உள்ளதோ அதே போன்று கோவக்காயிலும் உள்ளது. இந்த செடியின் வேர் முதல் தண்டு வரை அனைத்து மருத்துவ தேவைக்களுக்காக பயன்படுத்தப்படுகின்றதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |