இந்த நிறத்தில் வெள்ளைப்படுதல் இருந்தால் ஆபத்து- பெண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பெண்ணாக பிறந்த அனைவருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கும்.
இந்த பிரச்சினை பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் ஏற்படுகிறது.
வெள்ளைப்படுதல் வெள்ளையாக இருக்கும் போது ஏற்படும் பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது.
அதே சமயம், வெள்ளை நிறத்தை விட்டு மாறும் போது கட்டாயமாக வைத்தியரை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது. வெள்ளைப்படுதலின் நிறத்திற்கேற்ப அவற்றின் பக்கவிளைவுகளை வேறுபடுத்திக் கண்டறியலாம்.
அந்த வகையில் வெள்ளைப்படுதல் பிரச்சினையை எப்படி கண்டறியலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. அடர்நிறம்
வெள்ளை நிறத்தில் மிகவும் கட்டியாக காணப்படும்.இந்த மாதிரியான போக்கு தொடர்ந்தால் மாதவிடாய் நேரத்தில் குறுதியும் கட்டியாக செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த போக்குகள் ஈஸ்ட் மற்றும் காளான் தொற்றுக் காரணமாக ஏற்படுகிறது.
மேலும் இந்த பிரச்சினை இருக்கும் வேளையில் ஏதாவது புண்கள் உள்ளதா என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2. இளம் மஞ்சள் நிறம்
வெள்ளைப்படுதல் பிரச்சினைக்கு முறையாக தீர்வு காணாவிடத்து கருப்பை தொடர்பான பிரச்சினைகளையும் மாதவிடாய் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.
3. பழுப்பு நிறம்
வெள்ளை நிறத்தில் செல்லும் வெள்ளைப்படுதல் திருமணத்திற்கு பின்னரும் அல்லது கருத்தரிப்பதற்கு பின்னரும் பழுப்பு நிறத்தில் செல்லும்.
இதனை கருத்தரிப்பதற்கு முன்பு முதல் 30 நாட்களுக்கு காணக்கூடியதாய் இருக்கும். இந்த மாதிரியான வெள்ளைப்படுதல் தாமத்திய உறவிற்கு பிறகு தான் ஏற்படும். இது அதிகப்படியாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |