சுவையாக இருந்தாலும் கோழி/மட்டன் ஈரலை யாரெல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?
சிக்கன் மட்டன் ஈரல் சுவையாக இருந்தாலும் அதை சில பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிடுவது உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வரும்.
கோழி மட்டன் ஈரலை யார் சாப்பிட கூடாது
அசைவ பிரியர்கள் நிறையபேர் இருப்பார்கள். அவர்களில் ஈரலை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம்.
ஈரலில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். ஆனால் ஈரலில் இருக்கும் சில ஊட்டச்சத்துககள் சில உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்கு சரிவராது. அந்த பிரச்சனைகள் பற்றி ஆராயலாம்.

யார் சாப்பிட கூடாது?
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள்
ஈரலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம். இது இதய நோயாளிகளுக்கு பிரச்சனைகளை கொண்டு வரும்.
எனவே, இதய நோயாளிகள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் சிக்கன், மட்டன் ஈரல் சாப்பிவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பிபி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
ஈரலில் சோடியம் மற்றும் கொழுப்பு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தப் பிரச்சனை அதிகரிக்கும். சிலருக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். இந்த நபர்கள் ஈரல் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது எனப்படுகின்றது.

சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள்
ஈரலில் புரதம் மற்றும் தாதுக்கள் அதிகமாக இருப்பதால் சிறுநீரகங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கிரியேட்டினின் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் சிக்கன், மட்டன் ஈரல் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
இது தவிர சிக்கன் மட்டன் ஈரலை சிறு குழந்தைகள்,தசை கோளாறுகள், ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் உள்ளவர்கள்,கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்நோரும் சாப்பிட கூடாது என வலியுறுத்தப்படுகின்றது.

ஈரல் சாப்பிட்ட பின் கவனம் தேவை
ஈரல் அதிக ஊட்டச்சத்துகள் கொண்டது என்றாலும், அதை சரியான முறையில் சாப்பிடாவிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். ஈரலை சாப்பிடும் அசைவ பிரியர்கள் என்றாலும் தினமம் சாப்பிடுவது யாருக்கும் நன்மை தராது.
ஈரலில் வைட்டமின் A மிகவும் அதிகமாக இருப்பதால் இதை அதிகம் சாப்பிட கூடாது. முக்கியமாக சப்ளிமென்டுகள் எடுப்பவர்கள் சாப்பிட கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |