யாரெல்லாம் கருவாடு சாப்பிடக் கூடாது? இந்த உணவோடு சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து
அசைவ உணவுகளில் அதிகமாகக் கொழுப்புச் சத்து இல்லாதது மீன் மற்றும் கருவாடு தான்.
கருவாடு சாப்பிடும் போதும் மீன், நண்டு உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடும் போது மோர், தயிர், கீரை போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
இது உணவு நச்சாதலுக்கு வழிவகுத்து மருத்துவர்கள் குறிப்பிடும் ஃபுட் பாய்சனில் கொண்டு விடும்.
கருவாடு சமையலின் போது அவற்றுடன் மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி சேர்த்து சமைக்க வேண்டும்.
இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
யாரெல்லாம் கருவாடு சாப்பிடக் கூடாது?.
சருமத்தில் அழற்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் கருவாடு சாப்பிட்டால் சருமத்தில் நமைச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும்.
எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் கருவாட்டை தொடவே கூடாது. கருவாட்டில் உப்பு அதிகமாக இருக்கும். எனவே இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ள கூடாது.
மேலும் அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு கருவாடு, மீன், நண்டு, இறால், தயிர், மோர் போன்ற உணவுகள் சாப்பிட கூடாது.
இதனால் சளி, இருமல், மூக்கடைப்பு, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.