இந்த உணவுகளுடன் மறந்தும் முள்ளங்கி சேர்த்து சாப்பிடாதீங்க.. ஆபத்து ஜாக்கிரதை
பொதுவாக முள்ளங்கி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
கோடைக்காலம் முடிந்து குளிர்காலம் வந்து விட்டாலேர பச்சை இலைகள் கொண்ட காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து விடும். இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவையாக பார்க்கப்படுகின்றது.
மற்ற காய்கறிகளிலும் பார்க்க முள்ளங்கியில் புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இந்த ஊட்டசத்துக்கள் செரிமான மண்டலத்தை சீர்ப்படுத்தி, வாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கின்றது. இவ்வளவு ஆரோக்கிய பலன்கள் இருந்தாலும், குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் நிச்சயம் ஆபத்து ஏற்படும்.
அப்படியாயின் முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கி எந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது?
1. பால் கலந்த உணவுகள் சாப்பிட்ட பின்னர் முள்ளங்கி சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் பால் கலந்த உணவுகளுடன் முள்ளங்கி சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அமில வீச்சு, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.
2. பொதுவாக காய்கறிகள் ஒன்றாக போட்டு சாலட் செய்யும் பொழுது வெள்ளரிக்காய் கலந்தால் முள்ளங்கி சேர்க்க வேண்டாம். இதனை தவறும் பட்சத்தில் வெள்ளரியில் வைட்டமின் சி உறிஞ்சும் அஸ்கார்பேட் உள்ளது. இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
3. பாகற்காய் சாப்பிடும் பொழுது முள்ளங்கி சாப்பிடக் கூடாது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் சுவாசம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |