கிராம்பு சாப்பிடும் முன் கவனம்! சிலருக்கு இது விஷம் ஆகலாம்- மருத்துவர் எச்சரிக்கை
எமது சமையலறையில் இருக்கும் மணம் கொண்ட மூலிகைகளில் ஒன்று தான் கிராம்பு.
வழக்கமாக கிராம்பை இனிப்பு வகைகள் தயாரிக்கும் பொழுது பயன்படுத்துவார்கள். இந்த கிராம்பில் ஏகப்பட்ட மருத்துவ பலன்களும் உள்ளன.
உணவுக்கு சுவை, வாசனை மட்டும் கொடுக்காமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வேலையையும் செய்கிறது.
கிராம்பு உடலுக்கு நல்லது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் சிலருக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில், யாரெல்லாம் கிராம்பு சாப்பிடக்கூடாது என்பதை காரணத்துடன் தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் கிராம்பு சாப்பிடக்கூடாது
1. சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை அளவு குறைந்திருக்கும் சமயத்தில் கிராம்பு உட்க் கொள்வதை தவிர்த்து கொள்வது நல்லது. ஏனெனின் இது இன்சுலின் உணர்வை மேம்படுத்தி சர்க்கரை அளவை குறைத்து விடும்.
2. வாய்வழி பிரச்சனை இருப்பவர்கள் கிராம்பு, கிராம்பு எண்ணெய் என கிராம்பு சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வாயில் எரிச்சல், கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வீக்கமும் ஏற்படலாம்.
3. இரைப்பைக் கோளாறு உள்ளவர்கள் கிராம்பு எடுத்துக் கொள்வதை குறைத்து கொள்ள வேண்டும். இது வயிற்றுக்குள் சென்று செரிமானக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
4. கல்லீரல் நோயாளர்கள் கிராம்பு, கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பு சப்ளிமெண்ட்களை மருத்துவர் பரிந்துரைக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனின் நாம் தவறுதலாக எடுத்துக் கொள்ளும் பொழுது கல்லீரல் செல்களில் நேரடி விளைவை ஏற்படுத்தும். மஞ்சள் காமாலை கல்லீரல் என்சைம்கள் அதிகரிப்பு ஏற்படும்.
5. கிராம்பு எண்ணெய் சிலர் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இது அவர்களின் உடலில் உள்ள நச்சுத்தன்மையை அதிகரித்து ஆபத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |