வெயில் காலத்தில் தயிர் அதிகம் சேர்ப்பவரா நீங்கள்? ரொம்ப ஆபத்தாம்
கோடை காலம் தொடங்கிவிட்டதால், பெரும்பாலான நபர்களின் உணவுகளில் தயிர் தான் முக்கியமாக இருக்கும். ஆனால் இந்த தயினை நாம் பயன்படுத்தும் செய்யும் தவறுகள் ஆரோக்கியத்தினை கெடுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தயிரின் சத்துக்கள் மற்றும் நன்மைகள்
தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
குளிர்ச்சியை தரக் கூடியது. வயிற்று புண்களை குணமாக்கும். சருமத்தை பராமரிக்கும். உடலில் நச்சு நீக்கியாக செயல்படும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் நீங்கள் தயிரை கவனமாக சாப்பிட வேண்டும். தயிரை உண்ணும்போது செய்யும் சில தவறுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தயிர் ஏற்படுத்தும் பிரச்சினை
தயிரை உடல் பருமன் கொண்டவர்கள், கபம் சர்ந்த பிரச்சினை உள்ளவர்கள், ரத்தப்போக்கு கோளாறு, வீக்கத்துடன் காணப்படும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர் உட்கொள்வதை தவிர்க்கவும்.
மோராக குடிக்கும்போது செரிமானம் விரைவாக இருக்கும் நிலையில், தயிர் அவ்வாறு இல்லையாம். ரெிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஏற்படும் என்பதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கொழுப்பு அதிகம் கொண்ட தயிரை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதுடன், எலும்புகளின் அடர்த்தியும் குறைய தொடங்கி, முழங்கால் வலியும் ஏற்படுகின்றது.
சளி பிரச்சினை உள்ளவர்கள், இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவில் தயிர் சேர்த்துக்கொள்வதால் உடலில் சோர்வும் ஏற்படுகின்றது.
சுவாச பிரச்சனைகள், நாசி நெரிசல், கீல்வாதம், வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.