Vegetable Paneer Stir Fry : எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு 'வெஜிடபிள் பன்னீர் ஸ்டிர் பிரை'
பொதுவாக ஜிம் போகின்றவர்கள் உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள் கலோரி கூடிய உணவை சாப்பிடுவதற்கு பயப்படுவார்கள்.
அந்த வகையில் மிகவும் ஆரோக்கியமான முறையில் காய்கறிகள் மற்றும் பன்னீரை வைத்து ஒரு ரெசிபியை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
இதை உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் உண்ணலாம். இது போன்ற சத்தான உணவை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- பூண்டு - பொடியாய் நறுக்கியது (6) பல்
- கேரட் - 1 கப்
- பச்சை குடமிளகாய் - 1 கப்
- சிவப்பு குடமிளகாய் - 1 கப்
- மஞ்சள் குடமிளகாய் - 1 கப்
- பெரிய வெங்காயம் - 1 கப்
- ப்ரோகோலி - 1 கப்
- பன்னீர் - 200 கிராம்
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
- சில்லி பிளக்ஸ் - 1 தேக்கரண்டி
- சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - 1 மேசைக்கரண்டி
- வெங்காயத்தாள் - 1 கப்
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் கேரட், சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், பெரிய வெங்கயம் இவை அனைத்தும் வெட்டி வறுத்த பூண்டுடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் ப்ரோகோலி சேர்த்து 3 நிமிடத்திற்கு நன்றாக வதக்க வேண்டும். 3 நிமிடத்திற்கு பின்னர் சதுரமாக நறுக்கிய பன்னீரை சேர்க்க வேண்டும்.
பின்னர் இந்த கலவைக்கு உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் மிளகுத்தூள், சில்லி பிளக்ஸ் ,சோயா சாஸ் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதற்கு பின்னர் தண்ணீர் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி 5 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். இப்போது சுடசுட வெஜிடபிள் பன்னீர் ஸ்டிர் பிரை தயாராகிவிட்டது .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |