யார் இந்த ப்ரீத்தி அதானி?
அதானி இந்தியாவின் செல்வந்தர்களில் முதல் நிலை செல்வந்தரும், முன்னணியை தொழில் அதிபருமான கௌதம் அதானியின் மனைவியே இந்த ப்ரீத்தி அதானியாவார். அதானி அமைப்பின் தலைமை அதிகாரியாக ப்ரீத்தி அதானி பற்றிய தகவல்களை நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
1996 ஆம் ஆண்டு அதானி அமைப்பின் தலைமை பொறுப்பினை ப்ரீத்தி ஏற்றுக் கொள்கிறார் இந்தியாவின் செல்வந்தர்கள் வரிசையில் முதலாம் இடத்தையும், உலக செல்வந்தர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தையும் வகிக்கும் கௌதம் அதானி, 1988 ஆம் ஆண்டு அதானி குழுமத்தை நிறுவினார். அதானி குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 12780 கோடி அமெரிக்க டலர்களாகும்.
கோடீஸ்வர வர்த்தகர்களின் வெற்றிக் கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனினும் அதானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய விபரங்கள் பெரிதாக வெளிவரவில்லை.
கௌதம் அதானியின் மனைவி ப்ரீத்தி அதானி மற்றும் அவரது இரண்டு மகன்களான கரன் அதானி, ஜீத் அதானி ஆகியோர் பற்றி விபரங்கள் மக்கள் மிகக் குறைவாகவே அறிந்து கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ப்ரீத்தி அதானி அதாவது கௌதம் அதானின் மனைவி பற்றிய தகவல்களை நாம் இன்று பார்க்க போகிறோம்.
யார் இந்த ப்ரீத்தி அதானி?
1965 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ப்ரீத்தி அதானி அகமதாபாத்தில் அமைந்துள்ள பல் மருத்துவ கல்லூரியில் தனது பல் மருத்துவக் கற்கை பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதானி குழுமத்தின், அதானி அமைப்பு தலைமை அதிகாரியாக 1996 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
வசதி குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ப்ரீத்தி அதானி தனது அதிக நேரத்தை செலவிட்டார்.
குஜராத் மாகாணத்தில் மக்கள் மத்தியில் கல்வி அறிவினை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை ப்ரீத்தி அதானி, முன்னெடுத்து வருகின்றார்.
பெரு நிறுவன சமூகப் பொறுப்பு என்னும் திட்டத்தின் கீழ் அதானி குழுமம் கடந்த 2018 - 19 ஆம் ஆண்டுகளில் மட்டும் 128 கோடி ரூபாய்க்கான செயல் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அதானி குடும்பம் ஆரம்பிக்கப்பட்டபோது 1996 ஆம் ஆண்டில் இரண்டு உறுப்பினர்களே அந்த அமைப்பில் அங்கம் வகித்தனர்.
எனினும், தற்பொழுது அதான் அமைப்பு இந்தியாவின் 18 மாகாணங்களில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.