பிக் பாஸ் சீசன் 5இன் வெற்றியாளருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 5ன் கிராண்ட் ஃபினாலேவில் போட்டியாளர் சன்னிக்கு டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.
வெற்றியாளர் சன்னிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் கோப்பை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.
சமூக வலைதளங்களில் சன்னியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி விஜேவாக முன்னேறிய சன்னி நடிகராகவும் உயர்ந்தார்.
பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சன்னியின் நிஜ பெயர் அருண் ரெட்டி.
கல்யாண வைபோகம் எனும் டிவி சீரியல் மூலம் பிரபலமான சன்னி பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாறியுள்ளார்.