சொந்த தம்பி இல்லை... ரோபோ சங்கரின் மருமகன் யார் தெரியுமா?
பிரபல நடிகையும், ரோபோ சங்கரின் மகளுமான இந்திரஜா என்பவருக்கு அவரது மாமா கார்த்திக்-குடன் திருமணம் நடைபெற்றது, பிரபலங்கள்- சொந்த பந்தங்கள் கலந்து கொண்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நடிகர் ரோபோ சங்கர்- பிரியங்கா தம்பதியினரின் மகள் இந்திரஜா, இவரும் நடிகை ஆவார்.
பிகில் படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார், தொடர்ந்து உட்டா, விருமன் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் இவருக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கார்த்திக், பிரியங்காவின் சொந்த தம்பி என கூறப்பட்டது, ஆனால் அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
இருவரும் காதலித்த நிலையில், வீட்டில் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
யார் இந்த கார்த்திக்?
திரைப்பட இயக்குனராக பணியாற்றி வரும் கார்த்திக், கார்வோ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதன்மூலம் நிறைய பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம்.
இதுபற்றி அவர் பேசுகையில், நான் பிரியங்காவின் சொந்த தம்பி கிடையாது, எங்கள் தொண்டு நிறுவனத்தில் ரோபோ சங்கர் மாமா மற்றும் பிரியங்கா அக்கா உறுப்பினர்கள்.
நான் எப்படி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேனோ அதேபோன்று என்னை தம்பியாக தத்தெடுத்துக் கொண்டனர்.
எனது முன்னேற்றத்தில் அவர்களது பங்கு உண்டு என தெரிவித்துள்ளார்.
விரைவில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |