அம்பானி வீட்டு மருமகள்- யார் இந்த அழகி ராதிகா மெர்சன்ட்?
இந்தியாவின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரும், உலக செல்வந்தர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ள முகேஷ் மற்றும் நீட்டா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் துணைவியாகப் போகும் யுவதியே இந்த ராதிகா மெர்சன்ட் ஆவார்.
ஆனந்த் - ராதிகா தம்பதியினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் நிகழ்வாக காணப்பட்டது.
முக்கியஸ்தர்களும், நட்சத்திரங்களும் புடைசூழ இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்வு மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
அம்பானியின் இளைய மருமகளாக வளம் வரும், ராதிகா மர்சன்ட் யார் என்பது பற்றி நெட்டிசன்கள் அதிகம் தேடத் தொடங்கியுள்ளனர்.
இந்த அழகிய இளம் பெண் யார்?
ராதிகா முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எண்கோ ஹெல்த் கேர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்ற அதிகாரி விய்ரன் மெர்சன்ட்டின் புதல்வியாவார்.
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகாவிற்கும் இடையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு அண்மையில் ராஜஸ்தானில் அமைந்துள்ள ஸ்ரீநாதஜீ ஆலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
27 வயதான ஆனந்த் அம்பானி, 28 வயதான ராதிகாவை சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றார்.
அம்பானி குடும்பத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ராதிகா பங்கேற்று இருப்பதனை காணக்கூடியதாக இருந்தது.
இஷா அம்பானி - ஆனந்த் பிரேம்லால் மற்றும் ஆகாஷ் அம்பானி - சுரேகா மேத்தா ஆகிய தம்பதியினரின் திருமண நிகழ்வுகளிலும் ராதிகாவை காண முடிந்தது.
ராதிகா விய்ரோன் மர்சன்டின் சிரேஸ்ட புதல்வி ஆவார். இவர் குஜராத்தின் கோட்ஸ் பகுதி சேர்ந்தவர் எனினும் சில ஆண்டுகளாகவே மும்பையில் வாழ்ந்து வருகின்றார்.
மும்பையின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான ஜான் கணவன்ட் பாடசாலையில் ராதிகா கல்வி கற்றார் இந்தியாவில் ஆரம்பக் கல்வியை கற்ற ராதிகா அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.
பல்கலைக்கழகத்தில் அவர் இளங்கலை பட்டத்தை பெற்றுக் கொண்டார். அரசியல் மற்றும் பொருளியல் துறையில் அவர் இளங்கலை பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதி சொகுசு வீடு நிர்மான நிறுவனங்களில் ஒன்றான இஷ்பிரவா நிறுவனத்தில் ராதிகா பணியாற்றி உள்ளார்.
ராதிகா, ஆனந்த் அம்பானியின் மணப்பெண் மட்டுமின்றி என்கோ ஹெல்த் கெயார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் பதவியை வகித்து வரும் ராதிகா விலங்குகள் மீது அதீத நேசத்தை காண்பித்து வருகின்றார்.
விலங்குகளின் நலன்புரி திட்டங்கள் பலவற்றில் அவர் தன்னார்வ அடிப்படையில் இணைந்து பங்களிப்புகளை வழங்கி வருகின்றார்.
வர்த்தகம் விலங்கு நலன் ஆகிய துறைகளுக்கு அப்பால் ராதிகா பயிற்றப்பட்ட ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஸ்ரீநிவா கலை கல்லூரியில் பாவனா தாக்கார் என்னும் குருவிடம் ராதிகா பரதநாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார்.
தாதிகா – ஆனந்த் அம்பானி தம்பதியினரின் திருமண நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.