அம்மாவை கொன்ற அப்பா! பிக்பாஸ் பிரதீப் வாழ்வில் இப்படியொரு சோகமா?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ள நடிகர் பிரதீப் ஆண்டனியின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா என்று கேட்டு கவலைப்படும் அளவிற்கு அவரின் வாழ்க்கையில் ஒரு கறுப்பு பக்கம் இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
போட்டியாளர் பிரதீப் ஆண்டனி
பிரதீப் ஆண்டனி சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். இவர் விஸ்காம் படித்து இளங்கலை பட்டமும் பெற்றிருக்கிறார். திரைத்துறையில் அதிக ஆர்வம் இருந்ததால் 2016ஆம் ஆண்டு அருவி திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வாழ் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அனைவராலும் கவரப்பட்டார். அதன் பின் டாடா திரைப்படத்தில் கவினின் நண்பனாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது இவர் நிஜத்திலும் கவினின் நண்பன் தான்.
பிக்பாஸ் சீசன் 3இல் கலந்துக் கொண்டிருந்த கவினின் நண்பன் தான் இவர். அந்த நிகழ்ச்சியில் கவினை சந்திக்க வந்த போது கவீனை அறைந்தது இவர் தான்.
தாய் தந்தையர் மரணம்
பிக்பாஸ் போட்டிக்குள் நுழைந்த அடுத்த நாளே இவரின் பேச்சு தோரணையை வைத்து அடுத்த அசீம் இவர்தான் என்று அனைவரும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இவரின் வாழ்க்கையில் ஒரு துன்பமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவரின் தந்தை ஒரு நாள் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தன் மனைவியை கொலை செய்திருக்கிறார். அதன் பின் தானும் இனி வாழ முடியாது என்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவ்வாறு தனித்து இருக்கும் பிரதீப் ஆண்டனியை அவரது சித்தி தான் வளர்த்து வருகிறார்.
இவரின் ஆசையே சினிமாவில் தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்பது தான். இவரின் ஆசை நிறைவேறி மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் ஆகவேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |