ஆதிகுணசேகருக்கு நோ சொன்ன வேல ராமமூர்த்தி: அடுத்த இடத்தைப் பிடிக்கப் போகும் தனுஷ் பட நடிகர்!
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து உயிரிழந்ததையடுத்து அவரின் கதாப்பாத்திரத்திற்கு நடிக்க மற்றோரு நடிகரை ஏற்பாடு செய்யமுடியாமல் தவிக்கிறது.
மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மாரிமுத்து கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் பல திரைப்படங்களில் துணை நடிகராகவும், துணை இயக்குனராகவும் சினிமாவில் பலருக்கும் பிரபலமானவர்.
மேலும், இவர் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகியிருந்தார் ஏனெனில் அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் அவரின் நடிப்பு பலருக்கும் பிடித்து போக அவரின் ரசிகனாக மாறியிருக்கிறார்.
இந்நிலையில், அவரின் இறுதி மூச்சுக் கூட இந்த சீரியலுக்காகத்தான் விட்டிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிக் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
அடுத்த ஆதிகுணசேகரன்
மாரிமுத்துவின் மரணத்தை தொடர்ந்து அவருக்கு ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்த எதிர்நீச்சல் சீரியல் கதாப்பாத்திரம் இவரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கிறது.
அடுத்த ஆதிகுணசேகரனாக திரைப்படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய வேல ராமமூர்த்தி நடிப்பார் என்று பெரிதும் பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் நடிக்கப்போவதில்லை என்று சொல்லப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தற்போது அடுத்த ஆதிகுணசேகரனாக நடிகர் பசுபதி நடிக்கப்போவதாக சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் இது இன்னும் அதிகார்வபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |