மக்கள் அதிகம் பயன்படுத்தும் QR குறியீட்டை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?
தற்போதைய டிஜிட்டல் உலகில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் QR குறியீட்டை கண்டுபிடித்தவர் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
QR குறியீடு
தற்போது இருக்கும் டிஜிட்டல் காரணமாக அனைவரும் தொழிநுட்ப புலிகளாக இருக்கின்றனர்.
எங்கு சென்றாலும் ஹோட்டல்களில் பில் செலுத்துவது முதல் GPay மூலம் பணம் அனுப்புவது வரை, இது தவிர கடைகளில் வாங்கும் பொருட்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள உதவுவது வரை இந்த QR குறியீடு தான் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த குறியீட்டை பற்றி கண்டுபிடித்த பொறியாளர் பற்றிய தகவல் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த QR குறியீட்டைக் கண்டுபிடித்தவர் ஜப்பானிய பொறியாளரான மசாஹிரோ ஹரா ஆவார்.
இவரின் இந்த கண்டுபிடிப்பு உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் தொழிநுட்ப வாழ்கையை எளிதாக மாற்றி உள்ளது.
பாரம்பரிய பார்கோடுகள் அனுமதிக்கும் தகவல்களை விட அதிகமான தகவல்களைச் சேமித்து ஸ்கேன் செய்வதற்கு ஒரு சிறந்த வழி வேண்டும் என்பதை மசாஹிரோ ஹரா உணர்ந்தார்.
ஒரு பார்கோடுகள் வரையறுக்கப்பட்ட தரவை மட்டுமே வைத்திருக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே பார் கோடுகளை ஸ்கேன் செய்ய தேவை இருந்தது. எனவே, ஹரா புதிதாக ஒன்றை உருவாக்கத் தொடங்கினார்.
சதுர கட்டத்திற்குள் இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளை துண்டுகளைப் பயன்படுத்தும் "கோ" என்ற கிளாசிக் ஜப்பானிய போர்டு விளையாட்டிலிருந்து ஸ்கேன் செய்யக்கூடிய இரு பரிமாண குறியீட்டிற்கான யோசனை அவருக்கு கிடைத்தது.
டென்சோவில் தனது குழுவுடன் பல மாதங்கள் கடின உழைப்புக்குப் பின்னர் ஹரா 1994 இல் QR குறியீட்டை உருவாக்கினார். ஆரம்பத்தில், QR குறியீடுகள் தொழிற்சாலைகளில் கார் பாகங்களைக் கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்டன.
பின்னர் விரைவில், ஷாப்பிங், மருத்துவமனைகள், போக்குவரத்து, திரைப்படங்கள் மற்றும் பலவற்றில் அவற்றைப் பயன்படுத்த மக்கள் பல வழிகளைக் கண்டுபிடித்தனர்.
தற்போது OR குறியீடு உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாக மாறியுள்ளது. ஆனால் ஹாரா இதை வைத்து பணம் சம்பாதிக்கவில்லை. முழுக்க முழுக்க மக்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
