இந்த திகதிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ யாரிடமும் எளிதில் ஏமாற மாட்டீங்க
பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அதுபோலவே ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் வலியுறுத்துகின்றது. இது தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு சாஸ்திரமாகும்.
அதன் பிரகாரம் எண் 1 கூட்டு தொகையாக கொண்ட (1,10,19,28) ஆகிய திகதிளில் பிறந்தவர்கள் வலுவான தனித்துவ உணர்வு, தலைமைத்துவ திறன்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம். இந்த திகதிகளில் பிறந்தவர்களின் விசேட குணங்கள் மற்றும் ஆளுமைகள் குறித்து முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.
விசேட ஆளுமைகள்
இந்த திகதிகளில் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் இவர்கள் வணிக துறையில் உச்சத்தில் இருப்பார்களாம். வியாபாரத்தில் அவர்களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்பது போல் அவர்களின் ஆற்றல் இருக்கும்.
இவர்கள் எந்த விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் போதும் பல தடவைகள் இது குறித்து தெளிவாக சிந்தித்து அதன் பின்னர் தான் செயலில் ஈடுப்படவே ஆரம்பிப்பார்கள். இதனால் அதில் அவர்களை வீழ்த்துவது அசாத்தியமானது.
வணிகம், மேலாண்மை, அரசியல், சுயதொழில் என அனைத்து துறை சார்ந்த அறிவும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். இவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் எந்த இடத்திலும் முதன்மை வகிக்க வேண்டும் என நினைப்பார்கள்.
இவர்கள் காதல் விடயத்தில் அதிகமாக ஈர்க்கப்படுகின்ற போதிலும் இவர்களின் சுதந்திரத்தை பாதிக்காமல் செயற்படுபகின்ற துணையை தான் தேர்ந்தெடுப்பார்கள்.
இவர்கள் சவால்களை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு சாதிப்பதில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் வெற்றியடைய பல்வேறு பிரச்சினைகளை நிச்சயம் கடக்க வேண்டியிருக்கும். இவர்களை ஏமாற்றி யாராலும் காரியங்களை சாதித்துக்கொள்ளவே முடியாது.
மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் அழகிய தோற்றத்தையும் காந்த ம் போன்ற பார்வையையும் இவர்கள் கொண்டிருப்பார்கள்.
கும்பத்தில் நேரடியாக நகரும் சனி: அட்டகாசமான பலன்களை அனுபவிக்கப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |