மே மாதத்தின் அதிர்ஷ்ட ராசிகள் யார் தெரியுமா? இது நடந்தே தீரும்
இன்று மே மாதம் ஆரம்பித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை கஷ்டத்தை அனுபவித்த ராசிகள் அதிர்ஷ்டத்தை தட்டி தூக்கப்போகிறார்கள்.

மே மாத ராசி பலன்
மே மாதம் பிறக்கப்போகிறது, ஜோதிடரீதியாக மே மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகின்றது. இந்த மாதத்தில் புதன், செவ்வாய், சூரியன் போன்ற பல சக்திவாய்ந்த கிரகங்கள் தங்கள் பெயர்ச்சியை ஆரம்பிக்கின்றன.
மே மாத தொடக்கத்தில் புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாகி, மே 15 அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

மே 26 அன்று புதன் உதயமாகி, மே 29 அன்று மிதுன ராசிக்குள் செல்கிறார்.
மே 2 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியில் நுழைவதால், செவ்வாய்-சனி சேர்க்கை முடிவுக்கு வருகிறது. மே 14 அன்று சுக்கிரன் மிதுன ராசிக்கும், மே 15 அன்று சூரியன் ரிஷப ராசிக்கும் நுழைகிறார்கள்.
எனவே இந்த பெயர்ச்சி மூலம் எந்த ராசிகள் நன்மை பெறும் என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசி
- மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் வளர்ச்சியடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வோ சம்பள உயர்வோ கிடைக்கும். தொழிலில் வணிகம் தொடர்பான நல்ல லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் போன்றவை கிடைக்கும். கடின உழைப்புக்கான முழுப் பலனும் கிடைக்கும். அரசு ஊழியராக இருந்தால் நீங்கள் சிறந்த லாபத்தை பெற ஒரு வாய்ப்பு காத்துக்கொண்டு இருக்கிறது.
ரிஷப ராசி
- ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை வருமானத்தில் பெரும் உயர்வை ஏற்படுத்தும். இதனால் சம்பள உயர்வு, பதவி உயர்வு, எதிர்பாராத வருமானம் என நிதி ரீதியாக பல நன்மை கிடைக்கும். குடும்ப உறவுகளிடையே சண்டை சச்சரவுகள் தீரும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்கள் திடீர் முன்னறேம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை மற்றும் கூர்மையான முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் மிகப்பெரிய லாபங்கள் கொடுக்கும். கடந்த சில மாதங்களை விட, விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு மே மாதம் அவர்களின் உழைப்புக்கேற்ற பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். வளர்ச்சிக்குத் தேவையான பல வாய்ப்புகள் தேடிவரும். இருக்கும் வேலையில் அவர்கள் புதிய உயரத்தை அடைய முடியும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).