கேப்டன் தெரிவுக்கான டாஸ்கில் இரு முக்கிய புள்ளிகள்! சூடுபிடிக்கும் பிக் பாஸ் வீடு..
பிக் பாஸில் கேப்டன் தெரிவு செய்வதற்கான டாஸ்க் தொடர்பில் வெளியான ப்ரோமோ ரசிகர்களிடையே பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6ல், சுமார் 20 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் முக்கிய போட்டியாளர்களாக ஜனனி, ஜிபி முத்து, சாந்தி , ரக்ஷிதா, தனலெட்சுமி மற்றும் மகேஸ்வரி பார்க்கப்படுகிறார்கள்.
கேப்டன் தெரிவு
மேலும் நேற்றைய தினம் மைனா நந்தனி பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக உள்நுழைந்திருந்தார். தொடர்ந்து இது போன்று பல பிரபலங்கள் இதில் உள்நுழைய இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் பிக் பாஸில் இந்த சீசனுக்கான கேப்டன் தெரிவு போட்டிகள் இடம்பெறுகிறது.
இதில் ஜனனி, ஜிபி முத்து மற்றும் சாந்தி என்போர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் சாந்தி எலிமினேட் ஆனதால் ஜனனி மற்றும் ஜிபி முத்துவிற்கான போட்டிகள் தொடர்கிறது.