வாரம் 2 நாளில் இந்த எண்ணெய்யை தடவினால் போதும்... நரைமுடி பிரச்சினையே வராதாம்!
வெள்ளை முடி பிரச்சினை என்பது பலருக்கும் தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. பலரும் பிஸியான வாழ்க்கை முறையால், உடல் ஆரோக்கியத்துடன், தலைமுடியை கவனிக்க முடியாமல், டென்ஷன், மனச்சோர்வு போன்றவற்றால், முடி கொட்டுவது அதிகமாகிறது.
நரைமுடி பிரச்சினையை தவிர்க்க பல விஷயங்கள் இருந்தாலும், வெங்காய எண்ணெயை தடவி வந்தால் தீர்வு காணமுடியுமாம். வெங்காய எண்ணெய் மூலம், முடி பிரச்சனையில் இருந்து விடுபட்டு, தலைமுடியை எப்படி அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுவது என இந்த பதிவில் காணலாம்.
நன்மைகள்
இரத்த ஓட்டம் சரியாக இருந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், வெங்காய எண்ணெயை தடவுவது நன்மை பயக்கும்.
மேலும், வெங்காய எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால், அது முடி மற்றும் உச்சந்தலைக்கு ஏராளமான ஊட்டச்சத்தை அளிக்கிறது.
இது முடியை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறது.
நிவாரணம்
வெங்காய தொடர்ந்து தடவி வருவதால் முடி உதிர்வு முதல் பிளவு முனை வரை நிவாரணம் அளிக்கிறது.
இது தவிர, இது முடியின் இயற்கையான pH ஐ பராமரித்து, முடியை அடர்த்தியாக மாற்றும் வேலையை செய்கிறது.
இந்த எண்ணெயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடி உதிர்வதைத் தடுக்கும் என்சைம்களை செயல்படுத்துகிறது.
ஆகையால் இந்த எண்ணெயை பயன்படுத்தினால், அது கூந்தலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும்.
இதில் உள்ள கந்தகம் உச்சந்தலையை ஆரோக்கியமாக்குகிறது. இது கூந்தலை வலுவூட்டுகிறது.
