நரை முடியை ஒரே வாரத்தில் கருமையாக்க வேண்டுமா?
நரை முடி பிரச்சினை உள்ளவர்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் தலைமுடியை கருமையாக்க விரும்பினால், நீங்கள் சாயமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நரை முடியை எப்படி கருமையாக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். கடுகு எண்ணெயுடன் மருதாணி மற்றும் நெல்லிக்காய் போன்றவறை வைத்து செய்முறை பார்ப்போம்.
செய்முறை
முதலில் இரும்புக் கடாயை எடுத்துக் கொள்ளுங்கள், கடாயில் ஏதேனும் ஒரு பிராண்டின் 200 மில்லி கடுகு எண்ணெயை ஊற்றவும்.
இந்த எண்ணெய் கடாயை மிதமான தீயில் வைத்து, அதில் 2 முதல் 3 டீஸ்பூன் ஹெர்பல் ட்ரை மருதாணி பொடியை சேர்க்கவும். அதன் பின்னர் மருதாணியை நன்கு கலக்கவும், அதை 2 முதல் 3 நிமிடங்கள் கலக்கவும்.
எப்படி தலையில் தேய்க்கவேண்டும்
இப்போது 1 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள் சேர்க்கவும், இவை கூந்தலின் பொலிவை பராமரிக்கவும், முடி பிரச்சனைகளை போக்கவும், வெள்ளை முடியை போக்கவும் இது உதவியாக இருக்கும்.
அதனோடு, ஒன்றரை முதல் இரண்டு தேக்கரண்டி வெந்தயப் பொடியைச் சேர்க்கவும். வேர்களில் இருந்து முடியை கருமையாக்குவதில் இது பலனளிக்கும். அடுத்ததாக, பழுப்பு நிறமாக மாறும் வரை சமைக்கவும்.
இந்த முழு செயல்முறையும் 7 முதல் 8 நிமிடங்கள் ஆகும். இந்தக் கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அது முற்றிலும் பழுப்பு நிறமாக மாறியதும், கேஸ்ஸை அணைக்கவும்.
அதன் பிறகு ஆற விடவும். குளிர்ந்த பிறகு, அதை 12 முதல் 24 மணி நேரம் மூடி வைக்கவும். 12 முதல் 24 மணி நேரம் கழித்து இந்த எண்ணெயை வடிகட்டவும். இந்த எண்ணெயை சில மாதங்களுக்கு சேமித்து வைக்கலாம்.
இந்த எண்ணெயை ஷாம்பு செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன் தடவவும். வடிகட்டிய பின், ஒரு பருத்தி உருண்டையை எடுத்து, அதை முழுவதுமாக நனைத்து, முடியின் வேர்களில் தடவவும்.
இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், இந்த எண்ணெய் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.