வெள்ளை மற்றும் பிரவுன் நிற முட்டைகள்! இதில் எது ஆரோக்கியம் தெரியுமா?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முட்டையில் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டையைக் குறித்த பல தகவல்கள் கூறப்படும் நிலையில், வெள்ளை மற்றும் பிரவுன் முட்டை இவற்றின் சத்துக்களைக் குறித்து பார்க்கலாம்.
முட்டையின் சத்துக்கள்
முட்டையில், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்பு, புரதம், கோலைன், பயோட்டின் - வைட்டமின் பி 7, வைட்டமின் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றது.
மேலும் இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு 200 கிராம் வரை உள்ளதாக கூறப்படுகின்றது. முட்டை ஓட்டின் கலரை வைத்து அதிலிருக்கும் சத்துக்களும் காணப்படுகின்றதாம்.
அதாவது கோழியுடன் இணையும் சேவலைப் பொறுத்தே முட்டை ஓட்டின் நிறமும் காணப்படுகின்றது. கோழியின் வளர்ச்சி மற்றும் அது இடும் மு்ட்டையின் சத்துக்கள் அவை எடுத்துக்கொள்ளும் உணவினைப் பொறுத்தே அதிலிருக்கும் சத்துக்களும் காணப்படுமாம்.
ஆனால் உடைந்த முட்டையினை மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றது. ஏனெனில், கோழியின் மீது இருக்கும் சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா முட்டைக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் இவ்வாறு கூறப்படுகின்றது.