காரில் திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையா? இந்த நான்கு விஷயத்தை செய்தால் போதும்
நீங்கள் பயணித்துக்கொண்ணடிருக்கும் சந்தர்ப்பத்தில் உங்கள் காரின் பிரேக் பிடிபடவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கார் பிரேக்
இன்றைய கால கட்டத்தில் அனைவரது கைகளிலும் வாகனம் என்பது கட்டாயமான பொருளாக உள்ளது. இது தினசரி வேலைக்கு செல்லும்போதோ அல்லது தொலைதூர பயணங்களுக்காகவோ வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த சந்தர்பத்தில் காரில் சில சமயங்களில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் பதற்றப்படாமல் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
முதலில் ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்கவும். இது காரின் வேகத்தை குறைக்கும். இதே சமயம் கிளிட்சை அழுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
இது நீங்கள் காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவும். இரண்டாவதாக உங்கள் காரை முதல் கியருக்கு கொண்டுவர வேண்டும். கியர் மாற்றும்போது கிளட்சை அழுத்த வேண்டிய தேவையில்லை.
கார் முதல் கியருக்கு வந்தவுடன் அதன் வேகம் குறையும். சில நேரங்களில் இடைவெளி விட்டு பிரேக்கை அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
இதன் மூலம் கார் கட்டுப்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கடைசி முறையாக ஹேண்டி பிரேக்கை இழுங்கள். இதை செய்யும்போது மிகவும் மெதுவாக செய்ய வேண்டும்.
ஹேண்ட் பிரேக் போட்டவுடன் படிப்படியாக வேகம் குறைய ஆரம்பிக்கும். கார் கட்டுப்பாட்டை இழந்திருக்கும் போது வேகமாக ஹேண்ட் பிரேக் போட்டால் கார் கவிழும் ஆபத்து உள்ளது. எனவே கவனமாக செயல்பட வேண்டும்.